முன்னாள் அரச தலைவர் தொடர்பில் வெளியான தகவல்.

0

முன்னாள் அரச தலைவர் கோட்டபாயவின் பாதுகாப்பிற்காக உயர்மட்ட பாதுகாப்பு திணைக்களத்தின் 226 அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி தலதா அத்துகோரள தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்தநாட்டில் நடந்த பல விடயங்களுக்குக் காரணமான முன்னாள் அதிபரின் பாதுகாப்பிற்காக காவல்துறை திணைக்களம் 226 பேரை பயன்படுத்தியுள்ளதாகத் தெரிவித்த அவர், இராணுவம் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பும் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

முன்னாள் அதிபரின் பாதுகாப்பிற்காக 6000 உயரடுக்கு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அதிக எண்ணிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000000
க பொ த பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு.

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எப்போது வெளியாகும் என்பது பற்றி இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.

எதிர்வரும் நவம்பர் மாதம் 25ம் திகதியின் பின்னர் பெறுபேறுகள் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

பரீட்சை விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யும் நடவடிக்கைகள் பூர்த்தியாகியுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன தெரிவித்துள்ளார்.

கடந்த மே மாதம் நாட்டின் 3844 பரீட்சை நிலையங்களில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நடத்தப்பட்டுள்ளது.

சாதாரண தரப் பரீட்சைக்காக 517,486 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.

இதில் 407,129 பேர் பாடசாலை பரீட்சார்த்திகள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply