கோவையில் 31-ந் தேதி முழு அடைப்பு: பா.ஜ.க அறிவிப்பு.

0

கோவையில் கார் வெடிப்பு சம்பவத்துக்கு பாரதிய ஜனதாவினர் உள்பட பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் பாரதிய ஜனதா சார்பில் கோவையில் வருகிற 31-ந்தேதி (திங்கட்கிழமை) முழு அடைப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக கோவை காந்திபுரத்தில் உள்ள பா.ஜ.க மாவட்ட தலைமை அலுவலகத்தில் பா.ஜ.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

கூட்டத்துக்கு பின்னர் முன்னாள் எம்.பி. சி.பி.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

கோவையில் கடந்த 1998-ம் ஆண்டு தி.மு.க. அரசு ஆட்சியில் இருந்தபோது குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது.

இந்த நிலையில் கோவையில் தற்போது நடக்க இருந்த சம்பவம் அதிர்ஷ்டவசமாக நடக்கவில்லை.

நடந்த சம்பவம் சிலிண்டர் வெடிப்பு தான் காரணம் என கூறினார்கள்.

ஆனால் அதுதான் இல்லை. பா.ஜ.க அலுலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.

ஆனால் தி.மு.க அரசு அதனை கண்டு கொள்ளவில்லை.

எங்களுக்கு வந்த தகவல்படி கோவையில் 1½ டன் வெடிபொருட்கள் கிடைத்துள்ளது. கொங்கு நகரின் தலைநகராக கோவை உள்ளது.

ஆனால் இங்கு பதட்டமான சூழ்நிலை உருவாகி உள்ளது. இந்த சம்பவத்தை கண்டித்து வருகிற 31-ந்தேதி முழு அடைப்பு நடைபெற உள்ளது.

அதற்கு அனைவரும் ஒத்துழைப்புதர வேண்டும். காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை 12 மணிநேரம் முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது. எல்லா இஸ்லாமியர்களும் பயங்கரவாதிகள் இல்லை.

இஸ்லாமிய மக்கள் இந்த முழு அடைப்புக்கு ஆதரவு தர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ, பா.ஜ.க. பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Leave a Reply