பணம் புழக்கம் அதிகரிக்து செல்வ வளத்துடன் வாழ வேண்டுமானால், முதலில் இதை தான் செய்ய வேண்டும். பிறகு பாருங்கள் நீங்கள் மட்டுமல்ல உங்களின் சந்ததியினர் கூட செல்வ செழிப்புடன் வாழ்வது உறுதி.

0

பணம் சம்பாதிக்கவும் பணம் சேர்க்கவும் நாம் ஓடாத நாளில்லை.

இந்த காலத்தில் எவ்வளவு தான் சம்பாதித்தாலும் அது நம் தேவைக்கு போதுமானதாக இருப்பதில்லை அப்படி நம் தேவைக்கு அதிகமாகவே தேவைப்படும் இந்த பணத்தை நாம் எப்படி எல்லாம் செய்தால் சேமிக்க முடியும் என்பதற்கு இன்றைய காலகட்டத்தில் பல வழிமுறைகள் இருந்தாலும் கூட ,நாம் என்ன தவறு செய்வதால் நம்மிடம் பணம் தங்குவதில்லை என்பதை பற்றியும் நாம் கொஞ்சம் சிந்தித்து தான் ஆக வேண்டும்.

சம்பாதிப்பதை கூட நாம் எப்போது பாடுபட்டு சம்பாதி விடுகிறோம் ஆனால் அதை சேமிப்பது தான் பெரும் பிரச்சனை. சேமிப்பு என்பது இல்லாமல் போவதற்கு என்ன காரணம் என்று அதை எப்படி சரி செய்வது என்றும் இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்வோம்.

முன்பெல்லாம் வீடுகளில் பாத்திரம் தேய்க்க துணி துவைக்க என்று வீட்டின் கொல்லை புறம் என்று ஒரு இடம் ஒதுக்கி இருப்பார்கள்.

அங்கு நாம் இந்த பணிகளை எல்லாம் செய்த பிறகு அந்தத் தண்ணீரானது வீணாகாமல் மரம்,செடி,கொடிகளுக்கு போவதை போல வைத்திருப்பார்கள்.

இதனால் தண்ணீர் எந்த வகையிலும் வீணாகாமல் பயன்பட்டுக் கொண்டே இருக்கும் அவைகளுக்கு போக நிலத்தடி நீராகவும் இந்த தண்ணீர் மாற வாய்ப்பு இருந்தது. இதனால் சிறு சிறு உயிரினங்கள் கூட வாழ்ந்து வந்தது.

இப்போது இருக்கும் காலகட்டத்தில் அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை.

நாம் சிங்க்யில் பாத்திரம் தேய்த்த பிறகு அந்த தண்ணீரானது நேரடியாக கால்வாய்களுக்கு சென்று வீணாகத்தான் மாறுகிறதே தவிர அதனால் மற்ற எந்த ஒரு உயிருக்கோ, தாவரத்திற்கோ நிலத்தடிக்கும் கூட பயன்பாடுவதில்லை.

இதை நாம் பழங்காலம் போல் மாற்ற முடியுமா என்றால் அது முடியாது தான். ஆனால் முடிந்த அளவுக்கு இப்படி தண்ணீரை வீணாக்காமல் நாம் சிக்கனமாக செலவு செய்வதன் மூலம் ஓரளவிற்கு நாம் தண்ணீரை சேமிக்க முடியும். பாத்திரம் தேய்க்கும் போது சிங்கிள் மெலிதாக தண்ணீர் வருமாறு செய்யலாம்.

தண்ணீர் குடித்து மீதம் வைத்து அந்த தண்ணீரை வீணாக கீழே ஊற்றாமல் தேவைக்கு மட்டும் எடுத்து கொடுத்து பயன்படுத்தலாம்.

அதே போல் தான் முடிந்த அளவிற்கு தண்ணீரை வீணாக்காமல் தேவைக்கு மட்டும் உபயோகிக்கும். இது இன்றைய நமக்கான விஷயம் என்பதை விட வருங்கால சந்ததியினருக்கும் இது இப்படி நாம் செய்வதால் அவர்களுக்கும் நாம் சேமித்து வைப்போம் பணம் காசு மட்டும் சேமித்து வைப்பது சேமிப்பல்ல அடுத்த சந்ததியினருக்கு இது போன்ற இயற்கை வளங்களையும் கொஞ்சமாகவது விட்டு செல்ல வேண்டும்.

சரி இப்போது இந்த தண்ணீருக்கும் பணத்தை செலவிற்கும் என்ன சம்பந்தம் இப்படி தண்ணீர் எந்த அளவிற்கு நாம் செலவு செய்து கொண்டிருக்கிறோமோ அதே அளவிற்கு நாம் கையில் உள்ள பணமும் குறைந்து கொண்டே செல்லும் என்பது அசைக்க முடியாத நம் முன்னோர்களின் கூற்று.

அதனால் தான் அவர்கள் சொல்லும் இந்த வார்த்தையை கேள்விப்பட்டிருப்போம் கையில் பணம் தண்ணீரை போல் செலவாகிக் கொண்டிருக்கிறது என்று. தண்ணீருக்கும் பணத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. பணம் சேர நீங்கள் எந்த வகையில் உழைத்தாலும் என்ன பூஜை செய்தாலும் அது தங்க வேண்டும் என்றால் இந்த ஒரு சில தவறுகளையும் நாம் செய்யாமல் இருப்பதும் மிகவும் முக்கியம் அதில் இது மிக மிக முக்கியமான ஒன்று.

அடுத்து நாம் செய்யும் மிகப் பெரிய தவறு இரவு நேரத்திற்கு மேல் தண்ணீரை எடுப்பது முன்பெல்லாம் நம் வீடுகளில் கிணறுகள் இருக்கும் ஆறு மணிக்கு மேல் கிணற்றில் நீர் இறைக்க மாட்டார்கள் நிலத்தில் தேவதைகள் இருப்பதாக ஒரு ஐதீகம் உண்டு. அவர்களை அந்த நேரங்களுக்கு மேல் நாம் தொந்தரவு செய்யக்கூடாது.

அதே போல் முன்பெல்லாம் காலையில் சீக்கிரமாக தண்ணீர் எடுப்பதாக இருந்தால் கிணற்றுக்குள் நேரடியாக வாளியை போட மாட்டார்கள் கையை கொண்டு லேசாக தட்டி சிறு சத்தம் எழுப்பி அதன் பிறகு தான் கிணற்றுக்குள் வாளியை இறக்குவார்கள் ஏனென்றால் தெய்வங்கள் இருக்கும் அந்த இடத்தில் முதல் நேரடியாக இப்படி போடக்கூடாது என்றும் நம் முன்னோர்கள் வழக்கத்தில் வைத்திருந்தார்கள்.

ஆனால் இப்போதெல்லாம் நாம் மோட்டர் போட்டு தான் தண்ணீர் எடுக்கிறோம் முடிந்த அளவிற்கு அதையும் நாம் ஒரு ஆறு அல்லது ஏழு முடிந்த அளவிற்கு எட்டு மணிக்கு மேல் மோட்டார் போட்டு தண்ணீர் எடுக்காமல் இருப்பது நல்லது.

இப்படி செய்வதன் மூலம் நமக்கு பணம் செலவழிந்தால் கூட பரவாயில்லை சம்பாதித்துக் கொள்ளலாம் வீட்டிற்கு தீராத கஷ்டங்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும்.

இன்றைய காலகட்டத்தில் இருவரும் வேலைக்கு செல்லும் நேரத்தில் இது கொஞ்சம் சிரமம் தான் ஆனால் முடிந்தவரை பகல் நேரத்தில் நமக்கு இரவுக்கு தேவைப்படும் தண்ணீரை நாம் மோட்டர் போட்டு வைத்து கொள்ளலாம்.

Leave a Reply