இலங்கை ஏற்றுமதி வருமானத்தில் அதிகரிப்பு.

0

இலங்கை ஏற்றுமதி வருமானத்தில் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் ஏற்றுமதி வருமானம் 11.83 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது.

கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் செப்டெம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியில் 8938.49 மில்லியன் டொலர் பெறுமதியான வர்த்தக பண்டங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் இந்த தொகை 9996.19 அமெரிக்க டொலர்கள் என தெரிவிக்கப்படுகின்ற நிலையில் கடந்த செப்டெம்பர் மாத ஏற்றுமதி வருமானம் 5.75 வீதமாக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply