குலதெய்வம் உங்களை தேடி வர இதை மட்டும் நீங்கள் சரியாக செய்து விடுங்கள் போதும். குலதெய்வம் எதுவென்று தெரியாதவர்களின் இல்லங்களில் கூட அவர்களின் குலதெய்வம் தேடி வந்து அருள் புரியும்.

0

குலதெய்வம் நம் வீட்டை காவல் காக்க வேண்டும் என்றால் எங்கிருந்து காவல் காக்கும் நிச்சயமாக அது நம் வீட்டில் நிலை வாசலில் இருந்து தான் நம்மை நம் தெய்வம் காக்கும். அதனால் தான் வீடு காட்டும் போது கூட நிலை வாசல் வைக்கும் போது நவதானியங்கள் , தங்கம், என சக்தி வாய்ந்த பொருட்கள் அனைத்தையும் சேர்த்து கவனமாக வைப்பார்கள் .அப்படி தெய்வமே வந்து நிற்கும் அந்த இடத்தை நாம் எப்படி வைத்திருக்க வேண்டும் என்பதை முதலில் தெரிந்து கொள்வோம் அடுத்து தெய்வம் நம்முடன் நிரந்தரமாக இருக்க என்ன செய்வது என்று பார்ப்போம்.

இப்போது நிலை வாசலை நாம் எப்படி வைத்திருக்க வேண்டும் என்பதை பார்ப்போம். அதாவது நிலை வாசலை நாம் எப்போதும் நல்ல தண்ணீர் கொண்டு சுத்தமாக துடைத்து அதில் மஞ்சளை குழைத்து நன்றாக பூசி விட வேண்டும். அவ்வாறு பூசும் போது கீழிருந்து மேலாக தான் பூச வேண்டும். இப்படி பூசிய பிறகு மஞ்சள், குங்குமம் வைக்க வேண்டும். இந்த மஞ்சள் வைப்பதும், குங்குமம் வைப்பதும் அவரவர் என்று தனித்தனி வழிமுறைகள் வைத்திருப்பார்கள் அந்த முறைப்படி வைத்துக் கொள்ளலாம். ஆனால் இப்படி வைக்கும் குங்கும போட்டு ஒற்றை படையில் வரும்படி வைக்க வேண்டியது மட்டும் மிகவும் முக்கியம்.

அதன் பிறகு தினந்தோறும் நிலை வாசலுக்கு ஊதுபத்தி, சாம்பிராணி, போன்றவை காட்ட வேண்டும். நாம் வீட்டில் எப்போது கற்பூர தீபம் ஏற்றினாலும், அந்த தீப ஆராதனையை நிலை வாசலுக்கும் கட்டாயமாக நாம் காட்ட வேண்டும்.

அதே போல் பூஜை செய்யும் போது மலர்களை நிலை வாசலுக்கு மேல் கொஞ்சமும். அதே போல் நிலை வாசலுக்கு கீழே கொஞ்சமும் தூவ வேண்டும். இதை வீட்டுக்குள் இருந்து வெளியே தூவ கூடாது. வீட்டிற்கு வெளியில் வந்து பூவை வைத்து வணங்கி, அதன் பிறகு தான் நாம் உள்ளே செல்ல வேண்டும். இந்த வாசலில் மாவிலை தோரணம் கட்டுவது மிகவும் சிறப்பு மாவிலையை மாதத்திற்கு ஒரு முறையாவது மாற்றி விடுங்கள். இந்த மஞ்சள் குங்குமத்தை வாரம் ஒரு முறை மாற்றினால் நல்லது.

இந்த முறையை சரியாக செய்தாலே போதும். குலதெய்வம் நம் வீட்டு வாசலில் எப்போதும் காவலுக்கு நிற்கும். அது மட்டும் இல்லாமல் நம் குலதெய்வம் எதுவென்று தெரியாமல் இப்படி நிலைவாசல் பூஜை செய்யும் போது மனதார கும்பிட்டால் போதும் அவர்களின் டு தேடி குலதெய்வம் ஆனது வந்து நிற்கும்.

Leave a Reply