இலங்கையில் பாடசாலை செல்வதை தவிர்க்கும் சிறுவர்கள்.

0

குறைந்த வருமானம் பெறும் வீடுகளில் உள்ள சிறுவர்களுக்கு அவர்களது குடும்பங்கள் உணவளிக்க முடியாததால், பெரும்பாலான மாணவர்கள் பாடசாலைகளுக்கு செல்வதை தவிர்ப்பதாக ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கூறுகின்றனர்.

இலங்கையில் ஏழில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் பாடசாலைகளில் இருந்து வெளியேறுவதாக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலட்சக்கணக்கான மாணவர்களுக்கு பாடசாலைகளில் உணவு கிடைப்பதில்லை என அரசின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாடசாலைகளின் உணவுகளுக்கு 60ரூபா மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளமையால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. பொருளாதார திவால் மற்றும் தொடர்புடைய காரணிகளால் குடும்பங்கள் மத்தியில் உணவுப் பாதுகாப்பின்மை அதிகரித்துள்ளது.

செஞ்சிலுவைச் சங்க அறிக்கையின்படி, ஏழில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள் ஏற்கனவே பாடசாலைகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

மேலும், 10 குடும்பங்களில் ஒருவர், நிலைமை மோசமடைந்தால், தங்கள் பி;ள்ளைகளும் பாடசாலைகளை தவிர்க்க வேண்டியிருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

கல்வி அமைச்சின் கூற்றுப்படி, பாடசாலைகளுக்கு செல்லும் மாணவர்கள்; 4.1 மில்லியன் பேர் உள்ளனர், அவர்களில் 1.1 மில்லியன் பாடசாலை மாணவர்கள் மட்டுமே மதிய உணவைப் பெறுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில பாடசாலைகளில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு உணவுகளை வழங்குகின்றனர். வேறு சில இடங்களில் தன்னார்வு நிறுவனங்கள், மாணவர்களுக்கு உணவுகளை வழங்கி வருகின்றன.

Leave a Reply