உங்கள் வீடு லட்சுமி கடாட்சம் நிறைந்தாக இருக்க வேண்டும் என்றால், இந்த பொருட்கள் எல்லாம் பூஜை அறையில் கட்டாயமாக இருக்கும்படி பார்த்து கொள்ளுங்கள்.

0

ஒவ்வொரு வீட்டிலும் பூஜைக்கு என்று தனியாக அறையோ அல்லது அதற்கான ஒரு இடமோ வைத்திருப்பது வழக்கம். அப்படி இருப்பதால் மட்டும் அந்த வீட்டிற்கு லட்சுமி கடாட்சம் வந்து விடாது. அந்த இடத்தை நாம் எப்படி வைத்திருக்கிறோம் என்பதை பொறுத்து தான் நம் வீட்டிற்கு லட்சுமி கடாட்சம் ஆனது கிடைக்கும். அதில் நாம் செய்யக்கூடிய விஷயங்களை செய்யாமல் இருப்பதும், செய்யக் கூடாதவைகளை செய்வது இப்படி ஆனவைகள் கூட நமக்கு வரவிருக்கும் லட்சுமி கடாசத்தை தடுத்து விடும். அது மட்டும் இன்றி பூஜை அறை என்று ஒன்று இருந்தால் அதில் சில பொருட்கள் நிச்சயமாக இருக்க வேண்டும். எனவே பூஜை அறையில் என்னென்ன இருக்க வேண்டும். எது வைத்திருக்கக் கூடாது என்பதை பற்றிய ஒரு பதிவு தான் இது.

பூஜை அறையில் சுவாமி படம் கட்டாயமாக இருக்க வேண்டும். ஸ்வாமி வைத்தால் தானே அது பூஜை அறை அப்படி இருக்கும் போது ஸ்வாமி படம் இல்லாமல் எப்படி என்று நினைக்க வேண்டாம். சிலர் படம் இல்லாமல் விளக்கு மட்டும் ஏற்றி வைப்பார்கள் அப்படி இல்லாமல் ஸ்வாமி படம்வைத்து வணங்க வேண்டும் என்பது தான் இதன் பொருள். குத்து விளக்கு ஏற்றுவதாக இருந்தால் இரண்டு விளக்கும், காமாட்சியம்மன் விளக்கு ஏற்றுவதாக இருந்தால் ஒன்றும் ஏற்ற வேண்டும். அந்த காமாட்சி அம்மன் விளக்கை தாம்பாள தட்டு வைத்து அதன் மீது கொஞ்சம் அரிசி போட்டு அதன் மேல் விளக்கு வைத்து ஏற்றினால் நல்லது. திரிக் கருகி இருக்கும் போது அதில் தீபம் ஏற்றக் கூடாது திரி மாற்றி தான் விளக்கு ஏற்ற வேண்டும். விளக்கு ஏற்ற நல்லெண்ணெய்,நெய் ஊற்றி ஏற்றினால் நல்லது. வாரத்திற்கு ஒருமுறையாவது வெற்றிலை, பாக்கு, பழம், வைத்து பூஜை செய்வது மிகவும் நல்லது.

அதே போல் ஊதுபத்தி ஏற்றும் போது இரண்டு ஊதுபத்தி ஏற்ற வேண்டும். மாதத்தில் இரண்டு முறையாவது வீட்டு வாசலில் மாவிலை தோரணம் மாற்றி கட்டினால் விசேஷம். ஸ்வாமிக்கு வைக்கும் சந்தனம், குங்குமம் தனியாகவும், நாம் வைத்துக் கொள்ளும் சந்தனம், குங்குமம் தனியாகவும் இருக்க வேண்டும். அதே போல் பூஜை அறையில் கட்டாயமாக விபூதி, சந்தனம், குங்குமம், கற்பூரம் இவை அனைத்தும் எப்போதுமே இருக்க வேண்டும்.

Leave a Reply