திருமணமான பெண்கள் செய்யவே கூடாத தவறுகள் என்னென்ன? இவற்றை செய்வதால் நடக்கும் விளைவுகள் என்ன தெரியுமா?

0

திருமணம் ஆனதும் பெண்கள் அடுத்த கட்ட பொறுப்பை ஏற்கிறார்கள். குழந்தை பிறந்ததும் அவர்கள் முழுமை அடைகிறார்கள்.

இப்படி ஒவ்வொரு பெண்ணும் குடும்பத்தில் முக்கிய அங்கமாக இருக்கிறார்கள்.

அவர்கள் தான் குடும்பத்தின் குல விளக்காகவும் திகழ்கிறார்கள். இப்படி இருக்கும் திருமணமான பெண்கள் வீட்டில் செய்யவே கூடாத தவறுகள் என்னென்ன? இந்த தவறுகளால் விழையக்கூடிய விளைவுகள் என்னென்ன? என்பதை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

திருமணமான பெண்கள் கழுத்தில் திருமாங்கல்யம் அணிவது வழக்கம். இது கயிறு அல்லது சரடாக இருக்கும்.

இப்படி மாங்கல்யம் அணிந்திருக்கும் பெண்கள் அதில் ஊக்கு போன்ற இரும்பு பொருட்களை மாட்டி வைப்பது உண்டு. இது போல கண்டிப்பாக செய்யவே கூடாது.

திருமாங்கல்யத்தில் இரும்பு எப்பொழுதும் சேரக்கூடாது. ஒன்று மஞ்சள் கயிறாக இருக்க வேண்டும் அல்லது தங்க சரடாக இருக்க வேண்டும்.

அப்படி அல்லாமல் அதனுடன் இரும்பு சேரும் பொழுது அந்த பெண்ணிற்கு பொறுமை என்பது இருக்காது. சிறு சிறு விஷயத்திற்கு கூட ஆவேசப்படுவார்கள்.

குடும்பத்தில் நடக்கும் பிரச்சனைகளை பெரிதாக்குவார்கள் எனவே மாங்கல்ய சரட்டில் இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்களை சேர்த்துக் கொள்ளாதீர்கள். திருமணமான பெண்கள் மெட்டி அணியாமல் இருக்கக் கூடாது.

சிலருக்கு நாட்கள் செல்ல செல்ல மெட்டியானது தேய ஆரம்பிக்கும். இதுபோல மெட்டி தேய்ந்தாலும், குடும்பத்தில் மகிழ்ச்சி தேயும் என்கிற ஒரு சாஸ்திரம் உண்டு எனவே திருமணமான பெண்கள் மெட்டி அணிந்து இருந்தால் அது தேய்ந்து விடுவதற்கு முன்னரே புதிதாக மாற்றிக் கொள்ளுங்கள்.

அது போல எல்லா விரல்களிலும் மெட்டி அணிய கூடாது. மெட்டி அணிய வேண்டிய விரல் கட்டை விரலுக்கு பக்கத்தில் இருக்கும் விரல் மட்டுமே ஆகும். ஃபேஷன் என்கிற பெயரில் மற்ற விரல்களிலும் மெட்டி அணிந்து கொள்கிறார்கள். இதுவும் பெண்கள் செய்யக்கூடாத ஒரு விஷயம் ஆகும். அதேபோல தலையில் இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்களை அணிந்து கொண்டு தூங்க கூடாது. தூங்கும் பொழுது எப்பொழுதும் தலையில் இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்கள் இருக்கக் கூடாது.

ஹேர் பின் இரும்பால் செய்யப்பட்ட ஒரு பொருள் தான் எனவே இது போல இரும்பு சம்பந்தப்பட்ட ஹார்பின், கிளிப்புகள் போன்றவற்றை கழட்டி வைத்துவிட்டு அதன் பிறகு நீங்கள் தூங்க செல்லுங்கள்.

நிம்மதியான உறக்கம் வரும். மன அழுத்தம், மன உளைச்சல் போன்றவை இதனால் தடுக்கப்படும். இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்கள் தலையில் இருந்தால் மனதில் கவலைகள் மறையாது.

Leave a Reply