பேருந்து கட்டணம் குறைக்க சந்தர்ப்பம் இல்லை.

0

டீசல் விலை 15 ரூபாவால் குறைந்தாலும் பேருந்து கட்டணத்தை குறைக்க வாய்ப்பில்லை என பேருந்து சங்கங்கள் தெரிவிக்கின்றன.

அத்தோடு வாகன உதிரி பாகங்களின் விலை வேகமாக அதிகரித்துள்ளதாக அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார்.

இதன்படி, டீசல் விலை 50 ரூபாவால் குறைக்கப்பட்டால் மாத்திரமே பேருந்து கட்டணத்தை குறைக்க வாய்ப்பு உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
000
05பிரதமர் பதவி பசிலுக்கா.. அரசாங்கத் தரப்பில் இருந்து வெளியான அறிவிப்பு

முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு பிரதமர் பதவி வழங்கப்படுவது தொடர்பில் வெளியாகும் செய்திகள் குறித்து அரசாங்கத் தரப்பில் இருந்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பசில் ராஜபக்சவுக்கு, பிரதமர் பதவி வழங்குவது தொடர்பில் இதுவரையில் கலந்துரையாடப்படவில்லை என நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

வெளிநாட்டில் இருக்கும் பசில் நாடு திரும்பிய பின்னர் பிரதமர் பதவியை வழங்குவதற்கான ஏற்பாடுகள் உள்ளதா? என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்,

Leave a Reply