பேருந்து கட்டணங்கள் தொடர்பில் வெளியான தகவல்.

0

எரிபொருள் விலை குறைப்பின் அடிப்படையில் பயணிகள் போக்குவரத்து கட்டணத்தை குறைக்க தயாராக இல்லை என தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் விலை குறைக்கப்பட்டடுள்ள போதிலும் பேருந்து தொழில்துறைக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “சங்கம் என்ற ரீதியில் இந்த விடயத்தில் இன்னும் முடிவெடுக்க முடியவில்லை. நடைமுறையில் பேருந்து கட்டணத்தை குறைப்பது குறித்து முடிவு எடுக்க முடியவில்லை.

ஏனெனில் தீவிரமான அணுகுமுறை இருக்கிறது. சமீபகாலமாக உதிரி பாகங்களின் விலை அதிகரித்து விட்டதால், நாங்கள் இதில் தலையிடவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply