அரிசியின் விலை தொடர்பில் வெளியான தகவல்.

0

நாட்டில் தற்போது இறக்குமதி செய்யப்படும் வெள்ளை அரிசியின் மொத்த விலை 160 ரூபாவாக குறைவடைந்துள்ளது.

இந்நிலையில் தற்போது அதன் சில்லறை விலை 178 முதல் 185 ரூபாவாக காணப்படுகிறது.

சிறப்பு அங்காடிகளில் இறக்குமதி செய்யப்படும் வெள்ளை அரிசியின் விலை 200 முதல் 210 ரூபா வரை விற்கப்படுகிறது.

உள்நாட்டின் வெள்ளை அரிசி ஒரு கிலோ 210 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் புறக்கோட்டையில் மாத்திரமன்றி, குருநாகல், மாத்தறை, பொலனறுவை, தென் மாகாணத்தின் பல நகரங்களிலும் அரிசியின் விலை குறைவடைந்துள்ளது.

Leave a Reply