தனியார் பால்விலை ரூ.2 முதல் ரூ.6 வரை உயர்வு.

0

தமிழகத்தில் ஆவின் நிறுவனம் மூலம் தினமும் சுமார் 30 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்படுகிறது.

இருந்தாலும் இது தமிழக நுகர்வோர் பால் துறையில் வெறும் 16 சதவீதத்தையே பூர்த்தி செய்தது.

மீதமுள்ள 84 சதவீதத்தை தனியார் பால் விற்பனையாளர்களே பூர்த்தி செய்து வருகிறார்கள்.

பால் கொள்முதல் விலை அடிக்கடி உயர்த்தப் படுவதால் தனியார் பால் விலையும் உயர்த்தப் படுகிறது. சமீப காலமாக கால்நடை தீவனப் பொருட்கள் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

இதனால் ஹெரிடேஜ், ஜெர்சி, ஆரோக்கியா ஆகிய 3 தனியார் பால் நிறுவனங்கள் தொடர்ந்து விலையை உயர்த்தி வருகின்றன.

இந்த ஆண்டு இதுவரை 3 தடவை பால் விலை அதிகரிக்கப்பட்டு உள்ளது.

இந்தநிலையில் நேற்று 4-வது முறையாக 3 தனியார் நிறுவனங்களும் பால் விலையை அதிரடியாக உயர்த்தி அறிவித்து உள்ளன.

இந்த பால் விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

2 மாதங்களுக்கு பிறகு பால் விலையை அதிகரித்து உள்ள தனியார் நிறுவனங்கள் லிட்டருக்கு ரூ.2 முதல் ரூ.6 வரை விலை உயர்வு செய்து உள்ளன.

ஜெர்சி, ஹெரிட்டேஜ் நிறுவனங்கள் பால் விலையை தலா ரூ.6 மற்றும் ரூ.4 என்ற விகிதத்தில் உயர்த்தி இருக்கின்றன. ஆரோக்கியா நிறுவனம் லிட்டருக்கு ரூ.2 அதிகரிப்பதாக அறிவித்து உள்ளது. இதனால் ஜெர்சி பால் லிட்டருக்கு ரூ.59ல் இருந்து ரூ.62-ஆக உயர்ந்துள்ளது.

ஜெர்சி, ஹெரிட்டேஜ் நிறுவனங்களின் பால் விலை ரூ.70 மற்றும் ரூ.72-ஆக உள்ளது.

தனியார் நிறுவனங்கள் பால் விலையை உயர்த்தி உள்ள போதிலும் ஆவின் நிறுவனம் பால் விலையை உயர்த்தவில்லை.

அதற்கு பதில் ஆவின் பால் விற்பனையை அதிகரிக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

தனியார் நிறுவனங்களின் பால் விலைக்கும், ஆவின் நிறுவனத்தின் பால் விலைக்கும் தற்போது லிட்டருக்கு 22 ரூபாய் வித்தியாசம் உள்ளது.

என்றாலும் தேவை காரணமாக தனியார் பால் விற்பனை தொடர்ந்து அதிகரித்தபடியே இருக்கிறது.

Leave a Reply