கரையோர ரயில் பாதையில் பயணிக்கும் அனைத்து ரயில்களினதும் கால அட்டவனை எதிர்வரும் 20ஆம் திகதி முதல் மாற்றியமைக்கப்படும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி அனைத்து ரயில்களும் குறிப்பிட்ட நேரத்தையும் விட 10 நிமிடங்களுக்கு முன்னர் பயணிக்கவுள்ளன.
கரையோர ரயில் பாதையை வழமைக்கு கொண்டு வர தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும் என கூறப்பட்டுள்ளது.
கோட்டை – பாணந்துரை ரயில் பாதை சீர்குலைந்திருப்பதால் புதிய ரயில் கட்டைகள் பொருத்தப்படும் வரை இந்த மாற்றம் மேற்கொள்ளப்படும் என தணைக்களம் அறிவித்துள்ளது.



