நாநாளை சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு இந்த வால் வழிபாடு செய்தால் நீங்கள் நினைத்த காரியம் நிச்சயம் கைகூடும்.

0

சனிக்கிழமை அன்று காலையில் எழுந்து குளித்து முடித்து சுத்தமாக நம் வீட்டில் பூஜை அறையில் ஆஞ்சநேயர் படத்தை நன்றாக சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு அவரின் படத்திற்கு துளசி மாலை அணிவித்தால் நல்லது. அப்படி உங்களுக்கு மாலை கிடைக்கவில்லை என்றால் கொஞ்சம் துளசி இலையாவது படத்தில் வைத்து விடுங்கள். இதன் பிறகு நமக்கு தேவையான இரண்டு பொருள் சந்தனம், குங்குமம் இரண்டு மட்டும் தான். மாலை அணிவித்த பிறகு விளக்கு ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். முதலில் உங்கள் குலதெய்வத்தை மனதார வேண்டி கொள்ளுங்கள்.

அதன் பிறகு அனுமரின் வால் பகுதி தொடங்கும் இடத்தில் சந்தனம் வைத்து அதன் மேல் குங்குமமும் வைக்க வேண்டும். அதை வைக்கும் போது கட்டாயமாக ஸ்ரீராம ஜெயம் சொல்ல வேண்டும். மந்திரங்கள் உங்களுக்கு தெரியவில்லை என்றாலும் அவரின் படத்தை துடைக்கும் போதும், சந்தனத்தை குழைக்கும் போதும், துளசி மாலை அணிவிக்கும் போதும் இந்த ஸ்ரீராம ஜெயம் என்ற வார்த்தை நீங்கள் சொல்லிக் கொண்டே இருங்கள். ஒரு நாளைக்கு ஒரு சந்தன பொட்டு மட்டுமே வைக்க வேண்டும். இது போல தொடர்ந்து நாற்பத்தியெட்டு நாட்கள் வைக்க வேண்டும். சனிக்கிழமை தொடங்கி முதல் நாற்பத்தியெட்டு நாட்கள் தொடர்ந்து இந்த வழிபாடு செய்து வர வேண்டும்.

ஒவ்வொரு பொட்டு வைக்கும் போதும் ஸ்ரீராம ஜெயம் சொல்லும் போதே நீங்கள் எந்த வேண்டுதலுக்காக இதை செய்கிறீர்கள் என்பதை மனதார அவரிடம் பிரார்த்தனை செய்து கொண்டு இந்த பொட்டை வைத்துக் வாருங்கள். படம் சிறியதாக இருந்தால் நாற்பத்தியெட்டு நாட்கள் பொட்டு வைக்கும் அளவிற்கு சின்ன சின்ன பொட்டாக வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் நாற்பத்தியெட்டு நாட்கள் கட்டாயமாக செய்ய வேண்டும்.

பெண்களும் இந்த பூஜையை தொடர்ந்து செய்யலாம். உங்களுக்கான அந்த மாதவிடாய் காலங்கள் இதில் கணக்கெடுத்துக் கொள்ளப்படாது. நீங்கள் இந்த பூஜையை நிறுத்தி உங்களுடைய அந்த நாட்கள் முடிந்த பிறகு அதை தொடர்ந்து செய்யலாம் முதலிலிருந்து தொடங்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது.

இந்த நாற்பத்தியெட்டு நாளுக்குள் உங்களுடைய எண்ணம் நிச்சயம் ஈரேறி இருக்கும். நாற்பத்தியெட்டுவது நாளின் முடிவில் அவருக்கு வடை மாலை சாற்றி ஸ்ரீராம ஜெயம் என்று எழுதிய மாலையும் சேர்த்து, துளசி மாலையும் போட்டு வெற்றிலை மாலை இப்படி அவருக்கு உகந்தது எது எதுவோ அதை செய்து அவருக்கு இந்த பூஜையை நிறைவு செய்து விடுங்கள்.

Leave a Reply