உடனடியாக கைது செய்யுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த நீதிமன்றத்தில் இன்று (13.10.2022) முன்னிலையாகியுள்ளார்.
இதனையடுத்து அவர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் கடும் எச்சரிக்கையுடன் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவை இன்று நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
எனினும் இன்று முற்பகல் அவர் நீதிமன்றில் முன்னிலையாகாததால், இராஜாங்க அமைச்சரை உடனடியாக கைது செய்யுமாறு பொலிஸ் மா அதிபருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதன்பின் மேன்முறையீட்டு நீதிமன்றில் தனது சட்டத்தரணிகள் ஊடாக முன்னிலையாகிய இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தினமும் நீதிமன்றில் முன்னிலையாக வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதன் பின் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரியவருகிறது.



