கசப்பான கஷ்டங்கள் இல்லாமல், இனிப்பான இன்பமான வாழ்க்கையை வாழ்நாள் முழுவதும் வாழ, நாளை விநாயகருக்கு இந்த 1 பொருளை நிவேதனமாக வையுங்கள்.

0

இன்றைய தினம் வழக்கம் போல விரதத்திற்கு என்ன செய்வீர்களோ, காலையில் எழுந்து குளிப்பது பூஜை அறையை சுத்தம் செய்வது என்று எல்லா வேலையையும் பார்த்துக் கொள்ளுங்கள். காலையிலேயே விநாயகரை வணங்கி விரதத்தை தொடங்கி விட வேண்டும். வீட்டில் விநாயகரது சிலை இருந்தால், அபிஷேகம் செய்ய வேண்டும். இல்லை என்றால் விநாயகரது திரு உருவபடத்தை துடைத்து பொட்டு வைத்துக் கொள்ளுங்கள்.

ஒரு சிறிய தாம்பூல தட்டில் அருகம்புல்லை பரப்பி, அதன் மேலே ஒரு வெற்றிலையை வைத்து, அதில் மஞ்சள் பிள்ளையாரை பிடித்து வைத்து, குங்குமப்பொட்டு வைத்து விடுங்கள். அருகம்புல் சிம்மாசனத்தில் விநாயகர் வந்து உங்கள் வீட்டில் அமர்ந்து விட்டார். இந்த விநாயகருக்கு பக்கத்தில் ஒரு சிறிய வெல்லம், இனிப்பு சுவை நிறைந்த வெல்லத்தை நிவேதனமாக வையுங்கள்.

விநாயகருக்கு ஒரு விளக்கையும் ஏற்றி வைத்து விடுங்கள். விநாயகரின் முன்பு நீங்கள் அமர்ந்து உங்களுக்கு இருக்கக்கூடிய கஷ்டங்களை எல்லாம் சொல்லி அந்த கஷ்டம் தீர வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். இந்த வழிபாட்டை முடித்துவிட்டு வெல்லத்தை இரவு முழுவதும் அப்படியே விட்டு விடுங்கள். அடுத்த நாள் வரை அந்த மஞ்சள் பிள்ளையாருக்கு பக்கத்தில் வெல்லம் அப்படியே இருக்கட்டும்.

மறுநாள் காலை எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு, மீண்டும் விநாயகருக்கு ஒரு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, ஒரு சிறிய பாத்திரத்தில் நீங்கள் வைத்த வெல்லத்தை எடுத்து போட்டு கரைக்க வேண்டும். உங்களுடைய கஷ்டங்கள் எல்லாம் அந்த வெல்லம் போல தண்ணீரில் கரைந்து போய்விட்டது என்று உங்கள் மனதார நினைத்துக் கொள்ளுங்கள். கரைத்த வெல்ல தண்ணீரை கால் படாத இடத்திலோ செடி கொடிகளுக்கு அருகிலோ ஊற்றி விடுங்கள். அவ்வளவு தான். உங்கள் கஷ்டங்கள் அனைத்தும் கரைந்து போய்விட்டது, இனிமையான தித்திப்பான வாழ்க்கையை அந்த விநாயகர் உங்களுக்கு நிச்சயம் கொடுப்பார் என்று நம்புங்கள்.

Leave a Reply