அரச நிறுவனங்களுக்கு கடுமையான உத்தரவு.

0

அரச நிறுவனங்களுக்கு பொதுமக்களிடமிருந்து கிடைக்கும் சாதாரணக் கடிதங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் வழங்க வேண்டும் என கடுமையான உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அரச நிறுவனங்களுக்கு அனுப்பும் கடிதங்கள், மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிக்கும் செயன்முறையை வினைத்திறனுடன் முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டிருந்தார்.

பொதுமக்கள் தமது வேலைகளை நிறைவு செய்து கொள்ள சிரமங்களுக்கு மத்தியில் அரச நிறுவனங்களுக்கு வருகின்றனர்.

எனினும் இதற்குப் பதிலாக, அந்நிறுவனங்களுக்கு மக்களால் அனுப்பப்படும் கடிதங்கள், மின்னஞ்சல்கள் மற்றும் தொலைபேசி அழைப்புகளுக்கு உடனடி பதிலை வழங்கும் வினைத்திறனான செயன்முறையை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.

ஜனாதிபதியின் இந்த உத்தரவின்படி ஜனாதிபதியின் செயலாளர் வழங்கியுள்ள ஆலோசனைப்படி, இந்த விடயம் தொடர்பான விதிமுறைகள் அடங்கிய விசேட கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளது.

பொதுநிர்வாக, உள்நாட்டு அலுவல்கள், உள்ளூராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சின் செயலாளரின் கையொப்பத்துடனான குறித்த விசேட கடிதம், அனைத்து அமைச்சுகளின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்கள தலைவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அந்த கடிதத்தில், அரச நிறுவனங்களுக்கு பொதுமக்களிடமிருந்து கிடைக்கும் சாதாரணக் கடிதங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் வழங்கவும் இதன் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, உடனடி பதில் வழங்க முடியாத சந்தர்ப்பங்களில், குறைந்தபட்சம் ஒரு வாரத்தினுள் இடைக்கால பதில் ஒன்றைப் பெற்றுக் கொடுப்பதற்கும் நான்கு வாரங்களுக்குள் இதற்கான இறுதி பதிலை அனுப்புவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அதேபோன்று அனைத்து உத்தியோகப்பூர்வ கடிதங்களுக்கும் பதிலளிக்கும்போது அக்கடிதத்தில் இடப்படும் கையொப்பத்திற்கு கீழ், அக்கடித்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயத்துடன் தொடர்புடைய பிரதானியின் நேரடி தொலைபேசி இலக்கம், தொலைநகல் இலக்கம் மற்றும் மின்னஞ்சல் முகவரி என்பன குறிப்பிடப்பட வேண்டும்.

Leave a Reply