வசிய பொருத்தமே இல்லாமல் திருமண வாழ்க்கை கசந்து போய் விட்டதா?

0

ஆணிற்கும் பெண்ணிற்கும் ஜாதகம் பார்ப்பது திருமணம் செய்து வைப்பது காலம் காலமாக பாரம்பரியமாக நாம் பின்பற்றக்கூடிய ஒரு வழக்கம். அந்த ஜாதக பொருத்தத்தில் வசிய பொருத்தம் என்ற ஒன்று சில பேருக்கு பொருந்தாமல் இருக்கும். அப்படி இருக்கும் போது ஜோதிட்படி அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கக் கூடாது. அப்படி வசிய பொருத்தம் இல்லாமல் ஒரு ஆணும் பெண்ணும் திருமண பந்தத்தில் இணையும் போது, அவர்களுடைய வாழ்க்கை கசந்து போக தான் செய்யும்.

திருமணம் நடந்த மூன்றே மாதத்தில் பிரிந்த கணவன் மனைவியை எல்லாம் கூட நாம் பார்த்து இருக்கின்றோம். வசியம் என்பது தவறான வார்த்தை அல்ல. ஒருவர் மேல் மற்றவர்களுக்கு ஏற்படக்கூடிய ஈர்ப்பு. புரிதல், இந்த ஈர்ப்பு இல்லை என்றால் இந்த உலகமே இல்லை. இந்த வசிய பொருத்தம் இல்லாத கணவன் மனைவிக்குள், வசிய தன்மையை கொண்டு வருவது எப்படி. எப்போதுமே எலியும் பூனையுமாக சண்டை போட்டு கொண்டே இருக்கும் வாழ்க்கைத் துணையை அன்போடு மாற்றுவது எப்படி, என்பதற்காக ஒரு சின்ன தாந்திரீக குறிப்பை தான் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. நம்பிக்கை உள்ளவர்கள் முயற்சி செய்து பாருங்கள். நல்ல பலனை பெறலாம்.

இந்த பரிகாரத்திற்கு நாம் பயன்படுத்தப் போகும் பொருள் வசம்பு. பேரம் பேசாமல் நாட்டு மருந்து கடைகளில் இதை வாங்கிக் கொள்ளுங்கள். பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்து விடுங்கள். குலதெய்வத்தை மனதார நினைத்துக் கொண்டு, இந்த வசம்பை ஏற்றி வைத்திருக்கும் விளக்கு நெருப்பில் காண்பியுங்கள். வசம்பு கருகி விடும். அந்த கருகிய வசம்பில் ஒரு சொட்டு நெய்விட்டு, உள்ளங்கையில் குழைத்தால் கருப்பு நிறத்தில் மை நமக்கு கிடைக்கும். இந்த மையை உங்கள் வாழ்க்கைத் துணையின் பெயரைச் சொல்லி உங்கள் நெற்றியில் இட்டுக் கொள்ள வேண்டும்.

இப்படி கணவரும் இந்த பரிகாரத்தை செய்து நெற்றியில் மையை வைத்துக் கொள்ளலாம். மனைவியும் இந்த பரிகாரத்தை செய்து நெற்றியில் மையை வைத்துக் கொள்ளலாம். நீங்கள் மனைவியாக இருந்து உங்கள் கணவர் உங்களை எப்போதுமே திட்டிக் கொண்டே இருக்கிறார் என்றால், தொடர்ந்து 48 நாள் இந்த பரிகாரத்தை செய்து வாருங்களேன். உங்களுடைய கணவரின் நடவடிக்கையில் மாற்றம் தெரியும். உங்கள் கணவர் தானாகவே உங்கள் மீது இருந்த வெறுப்பிலிருந்து வெளிவந்து, உங்கள் மீது தானாக பாசமாக நடந்து கொள்வார். இதே போல தான் ஆண்களும். சண்டை போட்டுக் கொண்டே இருக்கும் மனைவியை சரி செய்ய இந்த பரிகாரத்தை செய்து கொள்ளலாம்.

Leave a Reply