சொத்து சம்மந்தமான பிரச்சனைகள் தீர பரிகாரம்.

0

பொதுவாக அசையா சொத்துக்கள் வாங்கும் பொழுதே, அதில் எந்தவிதமான பாதகங்களும் இல்லாதவாறு நன்கு விசாரித்து வாங்கினாலும் அல்லது தங்களுக்கென்று இருக்கின்ற அசையா சொத்துக்களை தங்களுக்குள்ளாகவே முறையாக பிரித்துக் கொண்டாலும், பிரச்சனைகளை அறவே தவிர்த்து விடலாம். இந்த இரண்டில் ஏதாவது ஒன்றையோ அல்லது இரண்டையுமே எவரும் செய்யாமல் போகும் பொழுது தான் சொத்துக்கள் தொடர்பான பிரச்சனை பெரிதாகிறது.

இத்தகைய சொத்துப் பிரச்சினைகளில் தங்களுக்கான நியாயமான உரிமை கிடைக்காமல் போவதாக கருதும் நபர்கள், கீழ்கண்ட பரிகாரங்களை நம்பிக்கையுடன் செய்வதால் தங்களுக்குரிய சொத்துக்களில் ஏற்பட்டிருக்கின்ற பிரச்சனைகள் தீர்ந்து, அதை நல்ல முறையில் அனுபவிக்க வழி உண்டாகும் என தாந்திரீக சாஸ்திரம் தெரிவிக்கின்றது.

தங்களுக்கு சொந்தமான பூர்வீக சொத்துக்களை முழுமையாக அடைவதில் சட்டரீதியாகவும், வேறு வகையிலும் பிரச்சினைகளை சந்திப்பவர்கள் ஒவ்வொரு ஞாயிற்றுகிழமை அன்றும் காலை உணவு அருந்துவதற்கு முன்பாக, சிற்றிதளவு அரிசியையும், வெல்லத்தையும் கலந்து, கன்று போட்ட பசு மாடு ஒன்றிற்கு உணவாக கொடுக்க வேண்டும்.

தங்களுக்கு சொந்தமான பூர்வீக சொத்துக்களை முழுமையாக அடைவதில் சட்டரீதியாகவும், வேறு வகையிலும் பிரச்சினைகளை சந்திப்பவர்கள் ஒவ்வொரு ஞாயிற்றுகிழமை அன்றும் காலை உணவு அருந்துவதற்கு முன்பாக, சிற்றிதளவு அரிசியையும், வெல்லத்தையும் கலந்து, கன்று போட்ட பசு மாடு ஒன்றிற்கு உணவாக கொடுக்க வேண்டும்.

வெள்ளிக்கிழமைகளில் சாலையோரங்களில் இருக்கின்ற வயதான, ஆதரவற்ற நபர்களுக்கு ஒருவேளை உணவாவது வழங்கி வந்தாலும் உங்கள் பூர்வீக சொத்துக்களை, நீங்கள் அடைவதில் ஏற்பட்டிருக்கின்ற பிரச்சினைகள் சுமுகமாக தீரும்.

பொதுவாக ஒருவரின் ஜாதகத்தில் சனி மற்றும் செவ்வாய் ஆகிய இரு கிரகங்களின் திசைகள், புக்திகள் அந்த ஜாதகருக்கு பாதகமான பலன்களை தருகின்ற நிலையில் இருக்கும் பொழுது, அவரின் வீடு மற்றும் பூர்வீக சொத்துக்கள் தொடர்பான பிரச்சனைகளை எதிர் கொள்ளும் சூழல் உருவாகும். மேற்சொன்னபடி தங்களின் ஜாதகங்களில் சனி மற்றும் செவ்வாய் கிரகங்களின் பாதகமான தாக்கம் இருப்பதாக நீங்கள் அறிந்தால் சனி மற்றும் செவ்வாய் கிரகங்களின் அம்சம் கொண்ட மூலவர் தெய்வங்கள் இருக்கின்ற கோயில்களுக்கு சென்று வழிபட்டு, உங்களால் முடிந்த தானங்களை அக்கோயிலுக்கு அளிக்க வேண்டும்.

Leave a Reply