எதிர்காலத்தில் இலங்கையில் விவசாயத்துறை பாரிய வீழ்ச்சியை சந்திக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
அதாவது விவசாய ஆலோசகர்களின் தொழிற்சங்க போராட்டத்தின் காரணமாகவே இந்த வீழ்ச்சி ஏற்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
விவசாய ஆலோசகர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கைகளால் விதை உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் அரச கொடுப்பனவுகள் மற்றும் பதவி உயர்வு போன்ற கோரிக்கைகளை முன்வைத்து விவசாய ஆலோசகர்கள் கடந்த மே மாதம் முதல் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.



