தி.மு.க. அரசு புதிதாக பொறுப்பேற்றவுடன் அரசு டவுன் பஸ்களில் பெண்கள் இலவச பயணம் அறிவிப்பை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
இதற்கு தமிழகம் முழுவதும் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அரசு, தனியார் நிறுவனங்களில் பணியாற்றக் கூடிய ஊழியர்கள், கூலி வேலை செய்யும் பெண்கள், அதிகளவில் பயன்பெற்று வருகிறார்கள்.
வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு செல்லக் கூடிய பெண்கள் கூட இந்த வசதியை பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும் நகர் பகுதியில் வசிக்கும் பெண்கள் மட்டுமின்றி கிராமப்புறங்களில் உள்ளவர்களும் இலவச பயணத்தை அதிகளவில் தினமும் பயன்படுத்தி வருகின்றனர்.



