கொழும்பில் வீடுகள் இல்லாத குடும்பங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.

0

நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள போதிலும், வசதியான வீடுகள் மற்றும் உரிமைப் பத்திரம் வழங்கும் வேலைத்திட்டம் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர்பிரதீப் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் ஆலோசனையின் பேரில் எதிர்வரும் இரண்டு வருடங்களுக்குள் 30,000 வீட்டு உரிமைப் பத்திரங்களை வழங்கும் வேலைத்திட்டம் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சுக்கு சொந்தமான நிறுவனங்களின் முன்னேற்றம் குறித்து அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.

Leave a Reply