உள்நாட்டு எரிவாயு விலையை குறைப்பு.

0

உள்நாட்டு எரிவாயு விலையை குறைக்க லிட்ரோ நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்நிலையில் இன்று நள்ளிரவு முதல் குறித்த செயற்பாடு அமுலுக்கு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, 12.5 கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் விலை 271 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 4,280 ரூபாவாகும்.

அத்துடன் 5 கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டர் 107 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1,720 ரூபாவாகும்.

மேலும் 2.3 கிலோ சிலிண்டரின் விலை 48 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 800 ரூபாவாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply