நாளை புரட்டாசி முதல் நாள். இந்த 2 வார்த்தைகளை சொல்லி பெருமாள் வழிபாடு செய்தால் எம்பெருமானின் ஆசிர்வாதத்தை பரிபூரணமாக பெறலாம்.

0

நாளைய தினம் விசேஷமான நாள் என்பதால் இன்றைய தினமே உங்களுடைய வீட்டை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பூஜை அறையை சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

 நாளைய தினம் அதிகாலை வேலையிலேயே எழுந்து குளித்துவிட்டு பெருமாளுக்கு துளசி மாலை சாத்தி பெருமாள் படத்திற்கு முன்பாக ஒரு தீபத்தை ஏற்றி வைத்து இரண்டு கற்கண்டு, இரண்டு ஏலக்காயையும் நிவேதனமாக வைத்து மனப்பூர்வமாக இந்த புரட்டாசி மாத முதல் நாளை வரவேற்க வேண்டும்.

பெருமாளுக்கு கோடான கோடி நன்றிகளுடன் உங்களுடைய பூஜைகளை தொடங்குங்கள். கோவிந்தா கோவிந்தா என்ற நாமம் பெருமாளுக்கு மிகவும் உகந்தது. அதிலும் இந்த புரட்டாசி மாதத்தில் நம் வாயிலிருந்து வரும் கோவிந்தா என்ற நாமம் நமக்கு பல கோடி புண்ணியத்தை தேடித்தரும்.

ஆகவே நாளைய தினம் தீபம் ஏற்றும் போது இந்த நாமத்தை மனதிற்குள் உச்சரித்துக் கொள்ளுங்கள். அப்படி இல்லை என்றால் ஹரி ஹரி என்ற நாமத்தை உச்சரிக்கலாம். தீபம் ஏற்றும் போது மட்டுமல்ல இந்த மாதம் முழுவதும் நாம் பெருமாளின் நாமங்களை உச்சரித்துக் கொண்டே இருந்தால். கோடான கோடி புண்ணியத்தை பெற முடியும்.

வீட்டில் இந்த பூஜையை காலை 6:00 மணிக்கே செய்யத் தொடங்கி விடுங்கள். பெருமாளுக்கு நிவேதனம் வைத்து, விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, மனதார மகிழ்ச்சியோடு பிரார்த்தனை செய்து கொண்டு கற்பூர ஆரத்தி காண்பித்து பெருமாள் பூஜையை எளிதாக முடித்துக் கொள்ளுங்கள். பிறகு வழக்கம் போல உங்களுடைய வேலைகளை தொடங்கலாம். காலையில் இந்த பூஜையை செய்ய முடியாதவர்கள் மாலை 6:00 மணிக்கு செய்யலாம் தவறு கிடையாது.

காலையில் உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் பெருமாள் கோவிலுக்கு உங்களால் செல்ல முடியும் என்றால் காலை வேலையிலேயே பெருமாள் கோவிலுக்கு செல்லுங்கள். முடியாதவர்கள் மாலையில் பெருமாளை தரிசனம் செய்ய கோவிலுக்கு செல்லுங்கள். சிறப்பு அபிஷேகங்களுடன் சிறப்பு அலங்காரங்களுடன் பெருமாள் கோவில் நாளை மிகவும் விசேஷமாக இருக்கும். பெருமாள் கோவிலுக்கு செல்லும்போது கட்டாயமாக வாசனை நிறைந்த பூவும் துளசி இலை மாலையும் வாங்கிச் செல்ல வேண்டும். பெருமாள் தரிசனத்தை முடித்துக் கொள்ளுங்கள். பெருமாள் கோவிலில் கட்டாயமாக தீர்த்தமும் துளசி இலையும் உங்கள் கையில் கொடுப்பார்கள்.

தீர்த்தத்தினை வீணாக்காமல் குடித்து விடுங்கள். அந்த துளசி இலைகளை பத்திரமாக வீட்டிற்கு கொண்டுவந்து உங்கள் பூஜை அறையில் இருக்கும் பெருமாளின் பாதங்களில் வைத்து எடுத்து, பணம் வைக்கும் பெட்டியில் வைக்கலாம். பணம் வைக்கும் மணி பர்ஸ்ஸில் வைக்கலாம். நகை வைக்கக் கூடிய இடத்தில் வைக்கலாம். மிக மிக விசேஷமானது துளசி. அதிலும் நாளைக்கு உங்களுக்கு பெருமாள் கோவிலில் இருந்து கிடைக்கக்கூடிய இந்த துளசிக்கு ரொம்ப ரொம்ப விசேஷம்.

குறிப்பாக சனி பகவானால் பாதிக்கப்பட்டவர்கள், சனிதோஷம் உள்ளவர்கள், ஏழரை சனி நடப்பவர்கள் அனைவரும் நாளைய தினம் பெருமாள் வழிபாட்டை செய்ய வேண்டும். காக்கும் பகவானான விஷ்ணு பகவானுக்கு உகந்த நாள் அல்லவா இது. நம்மை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ள வேண்டிய விஷ்ணு பகவான் நாளைய தினம் மிக மிக பேரானந்தத்தில் இருப்பார். இந்த மாதம் முழுவதுமே பக்தர்களின் பூஜையில் தன்னை மறந்து இருப்பார். எந்த வரத்தைக் கேட்டாலும் உடனே கொடுத்து விடுவார். ஆகவே நாளைய தினம் அனைவரது வீட்டிலும் பெருமாளை வழிபாடு செய்து நிறைவான ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற கருத்தோடு இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

Leave a Reply