மாணவர்களுக்கு சிற்பி திட்டம் வழங்கும் நன்மைகள் என்னென்ன?

0

மாணவர்களுக்கு சிற்பி திட்டத்தில் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பது குறித்து விளக்கப்பட்டுள்ளது. சிற்பி திட்டம் ரூ.4.25 கோடி செலவில் செயல்படுத்தப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 13.9.2021 அன்று சட்டசபையில் அறிவித்தார்.

காவல்துறையுடன் மாணவர்களின் நெருக்கத்தை வளர்த்து அவர்களை சட்டத்தை மதிக்கும் இளம் சமுதாயமாக மாற்றுவது; பயங்கரவாதம், வகுப்புவாதம், போதை பழக்கம், குடிப்பழக்கத்துக்கு எதிரான மாணவர்களாக உருவாக்குவது; இயற்கையை நேசித்து பாதுகாப்பும் விழிப்புணர்வை ஏற்படுத்துவது போன்றவை இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

பள்ளி மாணவர்கள் ஒழுக்கத்திலும், கல்வியிலும் மேலும் சிறந்து விளங்கவும், நாட்டுப்பற்றுடன் நல்ல பண்புகளை வளர்த்துக்கொள்ளவும் இது வழிகாட்டும். உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உடற்பயிற்சிகள், யோகா போன்றவையும் கற்றுக்கொடுக்கப்படும்.

மேலும், குற்றச்செயல்களில் சிறுவர்கள் ஈடுபடுவதற்கான முக்கிய காரணங்களான, குடும்ப உறுப்பினர்களின் கவனக்குறைவு, போதிய குடும்ப வருமானம் இல்லாமை, ஆதரவற்ற நிலை, வேலைவாய்ப்பின்மை ஆகிய அவலங்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுத்து, அவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுவதை தடுப்பதும் இந்த திட்டத்தின் நோக்கமாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply