இன்றைய வானிலை தொடர்பில் வெளியான தகவல்.

0

நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சத்திய காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அனுராதபுரம் – பிரதானமாக சீரான வானிலை
மட்டக்களப்பு – பிரதானமாக சீரான வானிலை
கொழும்பு – சிறிதளவில் மழை பெய்யும்
காலி – சிறிதளவில் மழை பெய்யும்
யாழ்ப்பாணம் – பிரதானமாக சீரான வானிலை
கண்டி – சிறிதளவில் மழை பெய்யும்
நுவரெலியா – சிறிதளவில் மழை பெய்யும்
இரத்தினபுரி – சிறிதளவில் மழை பெய்யும்
திருகோணமலை – பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்
மன்னார் – பிரதானமாக சீரானவானிலை

ஆகவே பொது மக்கள் அனைவரும் இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையினை எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

Leave a Reply