எரிவாயு விநியோகம் தொடர்பில் வெளியான தகவல்.

0

ஒவ்வெருநாளும் சுமார் ஒரு லட்சம் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விடப்படுவதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

லிட்ரோ நிறுவனத்திடம் போதியளவான எரிவாயு கையிருப்பில் உள்ளது. இதனால் தட்டுப்பாடின்றி தொடர்ந்தும் மக்களுக்குத் தேவையான கேஸை வழங்க முடிந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

லிட்ரோ கேஸ் நிறுவனம் செலுத்த வேண்டியிருந்த கடனை செலுத்தி கடன் சுமையிலிருந்து விடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலக வங்கியுடன் இணைந்து பொருத்தமான கேஸ் வழங்குனவர்களை இனங்கண்டு எரிவாயுவை இறக்குமதி செய்தமை மற்றும் சிறந்த முகாமைத்துவம் காரணமாக வரிசையை இல்லாமல் செய்து மக்களுக்கு சேவை வழங்க முடிந்ததாகவும் முதித பீரிஸ் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000000

Leave a Reply