நாட்டை விட்டு வெளியேறினார் பசில் ராஜபக்ச.

0

முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச அமெரிக்கா சென்றுள்ளார். நேற்று (09) காலை அவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அமெரிக்கா நோக்கி புறப்பட்டார்.

அவர் இன்று (09) காலை 10.06 மணியளவில் எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான EK 651 விமானம் மூலம் டுபாய் சென்று அங்கிருந்து அமெரிக்கா சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச ஜூலை 9 ஆம் திகதி மக்கள் எழுச்சி காரணமாக நாட்டை விட்டு வெளியேற முயன்றார், அப்போது விமான நிலையத்திலும் குடிவரவுத் திணைக்களத்திலும் பயணிகளின் எதிர்ப்பு காரணமாக அவர் திரும்பிச் செல்ல வேண்டியிருந்தது.

அதனையடுத்து, ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு காரணமாக, மகிந்த ராஜபக்ச, பசில் ராஜபக்ச, அஜித் நிவார்ட் கப்ரால் உள்ளிட்டோருக்கு வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு, அண்மையில் நீதிமன்றம் பயணத்தடையை தற்காலிகமாக தளர்த்தியது.

இதன்படி, பசில் ராஜபக்சவுக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் ஒன்பதாம் திகதி வரை வெளிநாடு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையிலேயு பசில் ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply