மின்வெட்டு குறித்து வெளியான தகவல்.

0

இலங்கையில் மின் உற்பத்திக்கு தேவையான போதியளவு நீர்மட்டம் காணப்படுவதாகவும், நிலக்கரி இருக்குமாயின் எதிர்வரும் டிசம்பர் மாதம் வரையில் மின்வெட்டை முன்னெடுக்க வேண்டிய தேவையில்லை எனவும் பொதுப்பாவனையாளர் ஆணையகத்தின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும், தற்போது மின்சாரத்திற்கான கேள்வி குறைவடைந்துள்ளதாகவும் பொதுப்பாவனையாளர் ஆணையகத்தின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில்,

கடந்த வாரத்தில் 1 மணித்தியால மின்வெட்டு முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்ட போதிலும் அந்த ஒரு மணித்தியாலமும் மின்வெட்டு முன்னெடுக்கப்படவில்லை. கடந்த மூன்றாம் திகதி முதல் மின்வெட்டு முன்னெடுக்கப்படவில்லை.

அதற்கு காரணம் தற்போது மின்சாரத்திற்கான கேள்வி குறைவடைந்துள்ளமையே என கூறியுள்ளார்.
மேலும் மின்சாரத்திற்கான கேள்வி குறைவடைந்துள்ளமையால் மின்வெட்டை முன்னெடுக்க வேண்டிய தேவை இல்லை. தேவைக்கு அதிகமாக மின் உற்பத்தி செய்வதற்கான சாதாகமான நிலை காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, எதிர்வரும் இரண்டு, மூன்று மாதங்களில் மின் உற்பத்திக்கான நிலக்கரி பிரச்சினை ஏற்படவில்லை எனில் ஒரு மணித்தியால மின்வெட்டு கூட முன்னெடுக்கப்பட மாட்டாது என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply