ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ விரைவில் அமெரிக்கா செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி இராஜாங்க அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர், பசில் ராஜபக்ஷ அமெரிக்கா செல்லவுள்ளதாக கூறப்படுகின்றது.
அதேவேளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சர்கள் தற்போது ஜனாதிபதி முன்னிலையில் தற்போது பதவியேற்று வருகிறன்றனர்.
ஜனாதிபதி செயலகத்தில் இந்த நிகழ்வு தற்போது நடைபெறுகின்றது.



