இலங்கை தொடர்பில் அமெரிக்கா எடுத்துள்ள மகிழ்ச்சியான முடிவு.

0

இலங்கைக்கு வழங்கப்பட்ட கடன்களை மறுசீரமைப்பதற்கு அமெரிக்கா ஆதரவளிக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

அமெரிக்க திறைசேரி செயலாளரை மேற்கோள்காட்டி, இந்த தகவலை ஜனாதிபதி ஊடக பிரிவு இன்று வெளியிட்டுள்ளது.

இலங்கையின் கடன் மறுசீரமைப்பை அமெரிக்கா ஆதரவு வழங்கவுள்ளது. அத்துடன் பாரிஸ் கிளப் கோட்பாடுகள் மற்றும் உலக வங்கிக்கு இணங்க, நிதி நிவாரணம் வழங்குவதில் ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் அமெரிக்காவின் பிரதிநிதி நிறுவனங்களுடன் ஒத்துழைப்பதாக அமெரிக்க திறைசேரி செயலாளர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply