இலங்கை தோட்ட பணியாளர் சங்கம் விடுத்த எச்சரிக்கை.

0

தமக்கு குறைந்தபட்ச சம்பளத்தில் 70வீத சம்பள அதிகரிப்பு வழங்கப்படாவிட்டால் உடனடியாக பாரிய தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக இலங்கை தோட்ட பணியாளர் சங்கம் இன்று எச்சரித்துள்ளது.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள சங்கத்தின் தலைவர் நிஷாந்த வன்னியாராச்சி, சம்பள அதிகரிப்பு தொடர்பில் தோட்ட முதலாளிமார் சம்மேளனத்துடன் பல கலந்துரையாடல் சுற்றுகள் நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

இதன்போது தற்போதுள்ள குறைந்தபட்ச ஊதியத்தில் இருந்து 70வீத உயர்வு கோரப்பட்டது. எனினும் தமது கோரிக்கைக்கு முதலாளிமார் சம்மேளனம் உடன்படவில்லை. பல தோட்ட நிறுவனங்கள், அதிக இலாபம் ஈட்டுகின்றன. அவை தமது உண்மையான இலாப நட்டங்களை அரசாங்கத்திற்கு வெளிப்படுத்துவதில்லை.

இந்தநிலையில் அடுத்த வாரத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்படும்போது, 70வீத சம்பள உயர்வு வழங்காவிட்டால், நாடு தழுவிய தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாக இலங்கை தோட்ட பணியாளர் சங்கம் குறிப்பிட்டுள்ளது

Leave a Reply