கோதுமை மா தொடர்பில் மகிழ்ச்சி தகவல்.

0

தற்போது நிலவும் கோதுமை மா தட்டுப்பாடு எதிர்வரும் 15ஆம் திகதியின் பின்னர் முடிவுக்கு வரும் என நம்பிக்கை கொள்வதாக, அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

துருக்கியிலிருந்து கோதுமை மா இறக்குமதி செய்யப்படுவதாக அந்த சங்கத்தின் தலைவர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

எவ்வாறிருப்பினும், கோதுமை மா கிலோகிராம் ஒன்றின் விலை 450 ரூபா வரையில் அதிகரித்தால், 450 கிராம் பாண் இறாத்தல் ஒன்றின் விலையை, 350 ரூபா வரையில் அதிகரிக்க வேண்டி ஏற்படும் என சிற்றுணவக உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

Leave a Reply