மகாளயம், அமாவாசை என்பது சுபதினமா? அசுபதினமா? இந்த நாளில் இதை செய்யாவிட்டால் வரக்கூடிய பிரச்சனைகள் என்னன்னு நீங்களும் தெரிஞ்சுக்கணுமா?

0

அமாவாசையில் மிகப்பெரிய அமாவாசை என்பது மகாளய பட்சத்தை கூறுவார்கள். 15 நாட்கள் இருக்கக்கூடிய இந்த மகாளய பட்சத்தில் நீத்தார் கடன் செய்வது வழக்கம். 11/9/2022 முதல் 26/9/2022 வரை மகாளய பட்சம் இவ்வருடம் வரவிருக்கிறது. இந்த நாட்களில் முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய வழிபாட்டை செய்வதால் ஐந்து மடங்கு பலன்கள் அதிகமாக கிடைக்கும் என்பது ஐதீகம்.

மஹாளய பட்சம் மட்டும் அல்லாமல் ஒவ்வொரு மாதம் வரக்கூடிய அமாவாசையிலும் முன்னோர்களுக்கு வழிபாடு செய்ய வேண்டும் என்பது நியதி. ஆனால் எல்லா நாட்களிலும் அமாவாசை தோறும் முன்னோர் வழிபாடு செய்ய முடியாதவர்கள், இந்த மகாளய பட்சத்தில் அதை மொத்தமாக நிறைவேற்றி பலன் பெறுவார்கள். மகாளயத்திலும், அமாவாசை அன்றும் நம்முடைய வீட்டு வாசலில் இறந்து போன முன்னோர்கள் வந்து நிற்பதாக ஐதீகம் உண்டு. இவர்களுக்கு நாம் எள்ளும், தண்ணீரும் இறைத்து வழி அனுப்பா விட்டால் அவர்கள் ஏமாற்றம் அடைவார்கள்.

அவர்கள் ஏமாற்றம் அடையும் பொழுது நமக்கு நடக்க வேண்டிய நல்லவைகளும் தடைபடுகிறது. முன்னோர்களுடைய மனம் குளிரும்படி நாம் அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமையை சரியாக செய்யும் பொழுது தான் நமக்கு தடை இல்லாத வெற்றிகள் உண்டாகும். வீட்டில் சுபகாரியை தடைகள் அல்லது தொடர் பிரச்சினைகள் ஏற்பட்டால் முதலில் முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை நீங்கள் சரியாக செய்தீர்களா? என்பதை கவனியுங்கள்! அமாவாசை அன்று நீங்கள் எள்ளும், தண்ணீரும் இறைத்து நீர்க் கடன் செலுத்தாவிட்டால், அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்வார்கள்.

இதனால் உண்டாக கூடிய பித்ரு தோஷங்கள் நமக்கு சாபங்களாக மாறுகின்றன எனவே வீட்டில் இத்தகைய பிரச்சினைகள் ஏற்படுவதற்கு நிறையவே வாய்ப்புகள் உண்டாகி விடுகிறது. எனவே மகாளய பட்சத்தில் முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய வழிபாட்டை சரியாக செய்து முடித்துவிட்டால் இத்தகைய பிரச்சினைகள் அகலும். சங்கல்ப மந்திரத்தில் புரோகிதர்கள் அமாவாசை நாளை வித்தியாசப்படுத்தி கூறுவது உண்டு. இந்த நாட்கள் அசுப வழிபாடு செய்யக்கூடிய நாட்களாக கருதி வந்தது தவறாகும்.

அமாவாசை என்பதும் சுபதினமே ஆகும். புண்ணிய கடன்களை நிறைவேற்றுவதற்காக செய்யப்படும் இந்த வழிபாடு புண்ணிய நாட்களில் தான் செய்யப்பட்டு வருகிறது எனவே அமாவாசை அல்லது மகாளய புண்ணிய காலம் என்பது அசுப வழிபாடு செய்யக் கூடிய காலங்கள் அல்ல! சுப வழிபாடு செய்யக்கூடிய காலங்களே ஆகும். எந்த காரணத்தை கொண்டும் இந்த நாட்களில் செய்ய வேண்டிய விஷயங்களை செய்ய தவறக் கூடாது. காலையிலேயே எழுந்து சாப்பிடாமல் விரதம் இருந்து, முன்னோர்களுக்கு படையல் போட்டு வழிபட வேண்டும். அதன் பிறகு நாம் உணவு உண்ண வேண்டும். இவற்றை தொடர்ந்து கடைபிடித்து வந்தால் வாழ்க்கையில் இருக்கும் இன்னல்கள் யாவும் வியக்கத்தக்க வகையில் நீங்கும் என்பது நம்பிக்கை.

Leave a Reply