நிலை வாசலில் இந்த தவறை செய்தால் மகாலட்சுமி உங்கள் வீட்டில் நிலைத்து நிற்காமல் போய்விடுவாள்.

0

நம்முடைய வீடு சுபிட்சமாக இருக்க வேண்டும் என்றால் முதலில் நாம் கவனிக்க வேண்டிய இடம் நிலை வாசல். நிலை வாசலுக்கு வெளிப்பக்கத்தில் தான் செருப்பை கழட்டி விட்டு வருவோம். ஆனால் செருப்பு விடும் இடம் தானே என்று சொல்லி அந்த இடத்தை அசுத்தமாக வைக்கக் கூடாது. செருப்புகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கக் கூடாது. ஒரு செருப்பு கவிழ்ந்து, ஒன்று நிமிர்ந்தும் இருக்கக் கூடாது. சரியாக இரண்டு செருப்பையும் ஜோடி கலையாமல் அடுக்கி வைக்க வேண்டும்.

சில வீடுகளில் நிலை வாசலுக்கு ரொம்பவும் அருகிலேயே இரும்பில் செருப்பு வைக்கும் ஸ்டாண்ட் இருக்கும். நிலை வாசலுக்கு மிக மிக அருகில் செருப்பு ஸ்டாண்ட் வைப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். அப்படியே உங்களுக்கு வேறு இடம் இல்லை என்றாலும், செருப்பு ஸ்டாண்டை கொஞ்சம் தரையிலிருந்து மேல் பக்கத்தில் உயர்த்தி யார் கண்ணுக்கும் தெரியாமல் ஆணி அடித்து மாட்டிக்கொள்ளுங்கள். கூடுமானவரை செருப்பு ஸ்டாண்ட் இரும்பில் இருக்க வேண்டாம். பிளாஸ்டிக்கிலும் இருக்க வேண்டாம். மரக்கட்டையால் செருப்பு ஸ்டான்ட் தயார் செய்து கொள்வது நல்லது.

அடுத்து நிலை வாசல் கதவு. நிலை வாசல் கதவில் கூடுமானவரை தெய்வங்களின் படத்தை வைக்க வேண்டாம். நிலை வாசல் கதவு என்பது தினசரி நாம் பயன்படுத்தக்கூடிய ஒரு கதவு. அதை திறப்பது மூடுவதுமாகத் தான் இருக்கப் போகின்றது. தெய்வத்தின் திரு உருவப் படத்தை ஒரு இடத்தில் வைத்துவிட்டு, அதை இந்த பக்கமும் அந்த பக்கமும் அலைபாய விடக்கூடாது. இதுவும் அவ்வளவு சரியான விஷயம் அல்ல.

தேவை என்றால் கதவில் ஓம், ஸ்வஸ்திக் போன்ற தெய்வ கடாட்சம் நிறைந்த குறியீடுகளை போட்டுக் கொள்ளலாம். நிலை வாசலை தாண்டி வரவேற்பு அறைக்கு வந்த உடனேயே வரவேற்பறை பார்ப்பதற்கு எப்போதும் அழகாக இருக்க வேண்டும். குறிப்பாக வரவேற்பு அறை துர்நாற்றம் வீசக்கூடாது. அந்த இடத்தில் நல்ல வாசம் வீச ஒரு சிறிய கிண்ணத்தில் பச்சை கற்பூரம், துளசி போட்டு அதில் நல்ல தண்ணீரை நிரப்பி வையுங்கள். கூடவே இந்த தண்ணீரில் ஒரு ஐந்து ரூபாய் நாணயத்தை போட்டு வைப்பது மிகவும் நல்லது. இது உங்களுக்கு லட்சுமி கடாட்சத்தை நிறைவாக கொண்டு வந்து சேர்க்கும். இவ்வளவு விஷயங்களை உங்களால் பின்பற்ற முடியவில்லை என்றாலும், வரவேற்பறையில் ஒரு ஊதுவத்தியையாவது பொருத்தி வைத்து வாசமாக வைக்க வேண்டும்.

அடுத்தபடியாக பூஜையறை. பூஜை அறையை எப்பொழுதும் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். அந்த இடத்தில் தேவையில்லாத பொருட்களை போட்டு ஸ்டோர் ரூம் போல பயன்படுத்தாதீர்கள். பூஜை அறை என்பது சுவாமிகள் தங்கும் அறை. ஆகவே அதற்கு உண்டான மதிப்பை கட்டாயம் கொடுக்க வேண்டும். இதற்கு அடுத்து சமையல் அறை. சமையலறை எந்த அளவுக்கு உங்கள் வீட்டில் சுத்தமாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு உங்களுடைய வீடு லட்சுமி கடாட்சத்தோடு இருக்கும். இரவு தூங்க செல்லும் போது கூட அந்த சிங்கிள் எச்சில் பாத்திரத்தை வைக்காதீங்க.

உங்கள் வீட்டிற்கு கஷ்டத்தை கொண்டு வரக்கூடிய முதல் விஷயம் சிங்கிள் இருக்கும் எச்சில் பாத்திரங்கள் தான். கூடுமானவரை இரவு அந்த எச்சில் பாத்திரங்களை தேய்த்து விட்டு சமையல் கட்டை சுத்தம் செய்துவிட்டு தூங்கச் செல்லுங்கள். மறுநாள் காலை எழுந்து சமையல் அறையை பார்க்கும் போதே ஒரு மன நிறைவு வரும் பாருங்கள். அந்த ஒரு மனநிறைவு, அன்றைய நாள் முழுவதையும் சுறுசுறுப்பாக மாற்றிவிடும். பிறகு லக்ஷ்மி கடாட்சம் தானாக வீட்டிற்குள் நுழையும். மேல் சொன்ன விஷயங்களை முயற்சி செய்து பாருங்கள் உங்களுக்கே ஒரு புது அனுபவம் கிடைக்கும். நல்லதே நடக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

Leave a Reply