ஏற்றுமதி மூலம் இலங்கைக்கு 3.8 பில்லியன் டொலர் வருமானம்.

0

கடந்த வருடம் தேயிலை, இறப்பர், தெங்கு மற்றும் கறுவா ஏற்றுமதி மூலம் இலங்கை 3.8 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்டியுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.

அத்துடன் நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் தேயிலையின் ஏற்றுமதி வருமானம் 1.3 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

தேயிலை தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தரமான தேயிலை பறித்தல் மற்றும் உற்பத்தி செயன்முறைகள் குறித்து தெளிவுபடுத்தும் விழிப்புணர்வு நடவடிக்கையை நேற்று பத்தரமுல்லை அபேகம வளாகத்தில் ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் மேற்க்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்

,உரத் தட்டுப்பாட்டால் ஏற்றுமதி பயிர்த் தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்ததுடன், தேயிலை தொழில்துறையினர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்படும் எனவும் கூறினார்.

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியின் அனுகூலத்தை விவசாயிகள் தற்போது பெற்றுள்ளதாகவும், அதன்படி, ஒரு கிலோ தேயிலை விலை 2019 டிசம்பரில் காலி மாவட்டத்தில் ரூபா 80 முதல் 85 வரை இருந்த விலை தற்போது ரூ.250 மற்றும் 290 ஆக உயர்ந்துள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு கிலோ தேயிலை ரூ. 410, இதுவே ஒரு கிலோ தேயிலைக்கு கிடைத்த அதிகபட்ச விலையாகும். அதிக வெளிநாட்டு வருமானத்தை ஈட்டுவதற்காக தேயிலை தொழில்துறை நெறிப்படுத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் இதன்போது மேலும் தெரிவித்தார்.

Leave a Reply