300 ரூபாவாக அதிகரிக்கவுள்ள பாணின் விலை.

0

50 கிலோகிராம் கோதுமை மா மூடை ஒன்றின் விலை தற்போது இருபதாயிரம் ரூபா வரை உயர்ந்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி, ஒரு கிலோ கோதுமை மாவின் மொத்த விலை 400 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்தார்.

இந்நிலைமையினால் பாண் ஒன்றின் விலையை 300 ரூபாவாக அதிகரிக்க நேரிடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சந்தையில் தற்போது கோதுமை மாவுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் பல பேக்கரிகள் மூடப்படும் அபாயத்தில் உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply