பிரதமர் மோடி கேரளா பயணம்- கர்நாடகாவில் நலத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

0

நாள மாலை 6 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி கேரளா மாநிலம் கொச்சிக்கு வருகை தருகிறார்.

அதன் அருகே உள்ள ஸ்ரீ ஆதிசங்கரர் அவதரித்த காலடி கிராமத்திற்கு பிரதமர் செல்கிறார்.

செப்டம்பர் இரண்டாம் தேதி காலை 9:30 மணிக்கு கொச்சி கப்பல் கட்டும் நிறுவனத்தில், முதன்முறையாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கி போர்க் கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தை கடற்படையில் இணைத்து வைக்கிறார்.

தொடர்ந்து புதிய கடற்படை கொடியை பிரதமர் அறிமுகப்படுத்த உள்ளார் இதன் பின்னர் மதியம் 1:30 மணிக்கு கர்நாடகா மாநிலம் மங்களூருவில் ரூ. 3800 கோடி மதிப்பில் பல்வேறு திட்டங்களை திறந்து வைக்கும் பிரதமர், சில திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

Leave a Reply