விநாயகர் சதுர்த்தி அன்று பிள்ளையார் சிலையை வாங்க வேண்டிய நேரம் என்ன?

0

பஞ்சாங்கத்தின்படி சுபகிருது வருடம் ஆவணி மாதம் 15 ஆம் நாள் புதன்கிழமை சுக்ல பட்சத்தின் சதுர்த்தி திதி, மதியம் 2.45 மணிக்கு தொடங்கி மறுநாள் வியாழன் கிழமை மதியம் 3.22 வரை நீடிக்கிறது. எனவே நாளை மதியத்திற்கு மேல் விநாயகர் சிலையை வாங்கி வந்து வீட்டில் நிறுவுவது முறையாகும்.

விநாயகர் சிலையை வாங்கும் பொழுது வெறும் கையில் வாங்க கூடாது. கண்டிப்பாக பலகை அல்லது மனை ஒன்றை மஞ்சள், குங்குமம் இட்டு அலங்கரித்து கொண்டு செல்ல வேண்டும். அதன் மீது விநாயகரை அமர வைத்து வாங்கி வர வேண்டும். விநாயகர் சிலையை வாங்கும் பொழுது கண்களை தனியாக கொடுப்பார்கள். அதை வீட்டிற்கு வாங்கி வந்து சதுர்த்தி திதியில் கண்களை பதிப்பது முறையாகும். அதனால் தான் அதை தனியாக கொடுப்பது உண்டு.

பின்னர் வயிற்றுப் பகுதியில் சிறு களிமண் கொடுப்பார்கள். அதை வயிற்றுப் பகுதியில் வைத்து அழுத்தி அதில் ஒரு ரூபாய் நாணயம் ஒன்றை வைப்பார்கள். சிலையை நிறுவியதும் வெறும் கழுத்தாக விடக்கூடாது எனவே அருகம்புல் மாலை, எருக்கம் பூ மாலை போன்றவற்றை சாற்ற வேண்டும். விநாயகர் குடை விநாயகரை மகிழ்ச்சி படுத்தும் ஒரு பொருளாகும். எனவே கண்டிப்பாக விநாயகர் குடையை வாங்கி விநாயகருக்கு பின்புறமாக குச்சி தெரியாதபடி வையுங்கள்.

விநாயகர் சதுர்த்தி அன்று ஹிந்து புராணங்களின்படி சந்திரனை தரிசிக்க கூடாது. சந்திரனை அன்றைய நாளில் தரிசிப்பவர்களுக்கு மித்ய தோஷம் உண்டாகும் என்கிற நியதி உண்டு. புதன்கிழமை மதியம் 3.33 மணி முதல் இரவு 8:40 வரை சந்திரனை தரிசிக்க கூடாது. அதே போல மறுநாள் வியாழன் கிழமை அன்று காலையில் 9:29 மணி முதல் இரவில் 9.10 மணி வரை சந்திரனை தரிசிக்க கூடாது. இது தோஷத்தை உண்டாக்கும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

இவ்வருடம் ரொம்பவே விசேஷமான யோகங்களையும் கொடுக்கக்கூடிய அற்புதமான விநாயகர் சதுர்த்தியாக வந்துள்ளது. 10 வருடங்களுக்கு முன் இந்த யோகம் இருந்தது உண்டு. அதே போல இவ்வருடம் ரவி யோகம் கூடிய நன்னாளாக விளங்குகிறது. இந்நாளில் விநாயகர் சிலையை வாங்கி வந்து வழிபடுபவர்களுக்கு வாழ்வில் இருக்கும் தீய யோகங்கள் அனைத்தும் அழியும். நல்ல யோகங்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது. இந்த யோகத்தில் விநாயகரை வழிபடுபவர்களுக்கு வீடு, வாகன யோகம் கூட கிட்டும் என்பது ஐதீகம் எனவே விநாயகரை மனமுருக பிரார்த்தியுங்கள் நல்லதே நடக்கும்.

Leave a Reply