அடுத்த இரண்டு வாரங்களுக்குள் முட்டையின் விலையில் திருத்தம் செய்யவுள்ளதாக வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
முட்டை உற்பத்திச் செலவைக் கருத்தில் கொண்டே இந்த விலை மாற்றம் நடைமுறைப்படுத்தவுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
பல்பொருள் அங்காடிகளில் பொதி செய்யப்பட்ட முட்டைகளை விற்பனை செய்வதற்கு தற்போது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலை நியாயமற்றது என்பதனால், பொதியிடல் செலவு உட்பட புதிய கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய பொதி செய்யப்பட்ட வெள்ளை மற்றும் சிவப்பு முட்டைகளுக்கு தனித்தனியாக கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்படவுள்ளது.
அதேவேளை, அதிக விலையில் முட்டை விற்பனை செய்யும் வர்த்தகர்களைக் கண்டறிவதற்கான சோதனை நடவடிக்கையினை இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



