ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் இடதுசாரிக் கட்சிகளுடன் இணைந்து உருவாக்கப்படும் கூட்டணியின் ஊடாக எதிர்காலத்தில் நிச்சயமாக அரசாங்கம் அமைக்கப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் தெரிவித்துள்ளனர்.
தற்போதைய அரசாங்கம் பொஹொட்டு கட்சியின் தலைவர்களால் நடத்தப்படுவதால் பதவி வழங்கப்பட்டாலும் அதனை ஏற்கத் தயாரில்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீ ஜயவர்தனபுர கிராண்ட் மொனார்க் ஹோட்டலில் இன்று நடைபெற்ற கட்சியின் மஹரகம தொகுதிக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து இதுவரை எவரும் அரசாங்கத்தில் இணையவில்லை என தெரிவித்த மைத்திரிபால சிறிசேன, அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட நிமல் சிறிபால டி சில்வா கட்சி மத்திய குழுவில் ‘நாம் செல்வோம்.
வார்த்தையின் உண்மையான அர்த்தத்தில் அனைத்துக் கட்சி அரசாங்கத்திற்காக’.அடுத்த நாளே அரசாங்கத்தில் இணைந்து கொண்டதாகவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்தார்.
எதிர்காலத்தில் அமைச்சரவையில் மேலும் 30 அமைச்சர்களும் 40 இராஜாங்க அமைச்சர்களும் நியமிக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமக்கு பிரதமர் பதவி வழங்கினால் மேலும் பல மாற்றங்களைச் செய்வேன் என அக்கட்சியினர் தெரிவித்த போதிலும், பொஹொட்டு கட்சியின் தலைவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள அரசாங்கத்தில் பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



