கோவிலுக்கு சென்று வேண்டுதல் வைக்கும் போது இதை மட்டும் செய்தால் போதும்.

0

மண்டியிட்டு வேண்டுதல் என்ற ஒரு வார்த்தையை நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், எத்தனை பேர், இந்த முறையில் வேண்டுதலை செய்திருக்கிறார்கள் என்பது தெரியாது. நீங்கள் குலதெய்வ கோவிலுக்கு சென்றாலும் சரி, அல்லது வேறு ஏதாவது இஷ்ட தெய்வ கோவிலுக்கு சென்று வேண்டுதல் வைத்தாலும் சரி, முட்டி போட்டு இறைவனிடம் வரங்களை கேட்க வேண்டும். பள்ளிக்கூடங்களில் தண்டனை கொடுப்பார்கள் அல்லவா. சிறுபிள்ளைகளுக்கு தவறு செய்தால், முட்டி போடு என்று. அதேபோல இறைவனின் சன்னிதானத்திற்கு முன்பு நீங்கள் முட்டி போட்டு இரு கைகளையும் ஏந்தி உங்களுடைய பிரச்சனையை கடவுளிடம் சொல்லி வேண்டிய வரங்களை கேளுங்கள்.

அந்த காலத்தில் தண்டனை கொடுப்பதில் கூட நம்முடைய முன்னோர்கள் சில விஷயங்களை மறைத்து தான் வைத்துள்ளார்கள். பள்ளிக்கூடங்களில் குழந்தைகள் தவறு செய்தால் முட்டி போட வேண்டும்.

தோப்புக்கரணம் போட வேண்டும் என்ற தண்டனைகள் கொடுக்கப்படும். ஆனால் முட்டி போடுவதன் மூலம் நம்முடைய முட்டி பூமியை அழுத்தம் கொடுக்கும். இதை முழங்கால் இடுதல் என்று கூட சொல்லுவார்கள்.

இப்படி செய்யும் போது நாம் நினைத்தது நடக்கும். இந்த பிரபஞ்சம் நாம் கேட்டதை உடனே கொடுக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.

தவறு செய்து விட்டு, அந்த தவறை திருத்திக் கொள்வதற்காக தானே இந்த தண்டனை நமக்கு கொடுக்கப்படுகிறது. அப்போது குழந்தைகள் என்ன செய்வார்கள். ‘இனிமே கட்டாயம் வீட்டுப்பாடம் படித்து விட வேண்டும். வீட்டுப்பாடம் எழுதி விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டே இப்படி முழங்கால் இடும்போது, அவர்களுடைய அந்த எண்ணத்தை இந்த பிரபஞ்சமானது நிறைவேற்றிக் கொடுக்கும்’ என்ற ஒரு விஷயமும் இதில் மறைக்கப்பட்டுள்ளது.

தோப்புக்கரணம் போடுவதன் மூலம் மூளை சுறுசுறுப்பாக இயங்குகிறது. அதாவது காதை இருக்க பிடிக்கும் போது நம்முடைய மூளையானது சுறுசுறுப்பாக இயங்கும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. இதனால் தான் விநாயகருக்கு தோப்புக்கரணம் போட வேண்டும் என்ற வழக்கத்தையும் நம்முடைய முன்னோர்கள் சொல்லிக் கொடுத்து இருக்கிறார்கள்.

சரி, விஷயத்திற்கு வருவோம். இப்படி கோவிலில் நீங்களும் முழங்கால் இட்டு மண்டி இட்டு, இரு கைகளையும் ஏந்தி வேண்டுதல் வைக்கும் போது உங்களுடைய வேண்டுதலை இந்தப் பிரபஞ்சம் சீக்கிரம் ஏற்றுக் கொள்ளும். அந்த வேண்டுதல் சீக்கிரம் நிறைவேற்றியும் கொடுக்கப்படும் என்பது நம்பிக்கை. சில பேர் கோவில்களில் வேண்டுதல் வைத்து முழங்கால் மண்டியிட்டு கோவிலை வளம் வருவார்கள். கோவில் படி ஏறி, தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்துவார்கள். இப்படி எல்லாம் கூட நம்முடைய சாஸ்திரத்தில் உள்ளது.

உங்களுடைய உடம்பை வருத்திக் கொண்டு நீங்கள் முழங்கால் இட்டு, நடக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. சன்னிதானத்திற்கு முன்பு கோவிலுக்கு உள்பக்கத்திலேயே இப்படி மண்டியிட்டு இறைவனை நம்பிக்கையோடு மனதார வேண்டிக் கொண்டாலே போதும். நீங்கள் நினைத்தது நிச்சயமாக 48 நாட்களுக்குள் நடக்கும். நம்பிக்கை உள்ளவர்கள் இந்த சிறிய பரிகாரத்தை செய்து பார்த்து பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

Leave a Reply