தாய்லாந்தில் உள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீண்டும் இலங்கைக்கு திரும்பி வரவுள்ளமை குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவரை தொடர்புகொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமீபத்தில் இடம்பெற்ற சந்திப்பில் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச விடுத்த வேண்டுகோளை தொடர்ந்தே கோட்டாபயவை ஜனாதிபதி தொடர்புகொண்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அத்துடன் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் காரணமாக நாட்டிலிருந்து வெளியேறி பதவியை இராஜினாமா செய்த பின்னர் தாய்லாந்தில் தங்கியிருக்கும் முன்னாள் ஜனாதிபதி விரைவில் நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு பசில் ராஜபக்ச, ஜனாதிபதில் ரணிலிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
எனினும் 24 ம் திகதி கோட்டபய ராஜபக்க்ஷ நாடு திரும்பமாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.



