முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கான பாரிய பிரசாரத்தை முகநூல் ஊடாக ஆரம்பிக்க கோட்டாபயவுக்கு விசுவாசமானவர்கள் செயற்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் 24ஆம் திகதி இலங்கை வரவுள்ளதாகவும் விசுவாசிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலைட்யில் நாட்டு வரும் கோட்டாபயவை வரவேற்க பெருமளவிலான மக்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்குச் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.



