இலங்கை அரசாங்கத்தின் புதிய திட்டம்.

0

இலங்கை அரசாங்கத்தினால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தளர்வான விசா விதிமுறைகள் மேலும் கொரிய முதலீட்டாளர்களை இலங்கைக்கு ஈர்க்க உதவும் என இலங்கைக்கான தென்கொரிய தூதுவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பிரதமராக பதவியேற்றுள்ள தினேஷ் குணவர்தனவை நேரில் சந்தித்து கலந்துரையாடிய போதே தென்கொரியத் தூதுவர் சந்துஷ் வூன்ஜின் ஜியோங் இதனைக் கூறியுள்ளார்.

பிரதமர் தினேஷ் குணவர்தனவை, அலரி மாளிகையில் வைத்து தென்கொரியத் தூதுவர் சந்துஷ் வூன்ஜின் ஜியோங் நேற்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

பிரதமராக நியமிக்கப்பட்டமைக்கு வாழ்த்து

இலங்கையின் பிரதமராக நியமிக்கப்பட்டமைக்கு தினேஷ் குணவர்தனவிற்கு தென்கொரிய தூதுவர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இலங்கையில் 1980 களில் தமது நாடே அதிக முதலீட்டை செய்து முதலிடத்தில் இருந்ததாக குறிப்பிட்ட இலங்கைக்கான தென்கொரிய தூதுவர், முதலீடுகளை அதிகரிப்பதன் மூலம் அந்த நிலையை மீண்டும் பெறுவதற்கு தமது நாடு விரும்புவதாகத் தெரிவித்தார்.

விவசாய இயந்திரங்கள் தயாரிப்பு, மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் மீன்வளத் துறைகள் போன்ற புதிய துறைகளில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் தென்கொரியாவிற்கு தற்போது காணப்படுவதாக பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்திய – இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தைப் பயன்படுத்தி மிகப்பெரிய இந்திய சந்தைக்கு ஏற்றுமதி செய்வதற்கான சாத்தியக்கூறுகளையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 45 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இந்த ஆண்டின் பிற்பகுதியில் கொரிய திரைப்பட விழா உட்பட பல நிகழ்ச்சிகள் நடத்தப்படும் எனவும் தூதுவர் சந்துஷ் வூன்ஜின் ஜியோங் கூறினார்.

இந்த சந்திப்பின் போது பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்கவும் உடனிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply