இலங்கை ஆசிரியர் சங்கம் முன்வைத்த எச்சரிக்கை.

0

இலங்கையில், பாடசாலை மாணவர்களை தனியார் துறைகளில் தொழில் புரிவதற்கு இடமளித்தால் மாணவர்களின் இடைவிலகும் தொகை அதிகரிக்கும் அதேவேளை சிறுவர் தொழிலாளர்கள் உருவாகும் நிலையும் ஏற்படும் என இலங்கை அரசாங்க ஆசிரியர்களின் சங்கத்தின் உப தலைவர் ஜீவராசா ருபேஷன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இலங்கை அரசாங்க ஆசிரியர்கள் சங்கத்தின் உப தலைவர் ஜீவராசா ருபேஷன் மட்டக்களப்பில் வைத்து நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அவர் மேலும் தெரிவிக்கையில், “அண்மையில் பாடசாலை மாணவர்கள் தனியார் துறைகளில் மாதாந்தம் 20 மணிநேரம் தொழில் புரிவதற்கு இடமளிக்க வேண்டுமெனவும் ஊழியர் சேமலாப நிதி உள்ளிட்ட சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்வதாகவும் தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply