பொலிஸாரின் கோரிக்கை நிராகரிப்பு!

0

அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புக்களால் நாளை கொழும்பு விஹார மகாதேவி பூங்காவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்டத்தை தடை செய்ய உத்தரவிடக் கோரிய கோரிக்கையை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.

கறுவாத்தோட்டம் பொலிஸாரினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை கொழும்பு பிரதான நீதவான் நந்தன அமரசிங்க நிராகரித்துள்ளார்.

போராட்டத்தின் போது அமைதிக்கு குந்தகம் ஏற்பட்டாலோ அல்லது சொத்து சேதம் ஏற்பட்டாலோ அதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்க பொலிஸாருக்கு அதிகாரம் உள்ளது என தலைமை நீதவான் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply