புரட்டாசி மாத ராசி பலன்கள் 2018

0

மேஷம்
(அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரக நிலைகள்: செப்டம்பர் மாதம் 17 ந் தேதி இதுவரை உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருந்த சூரிய பகவான் ரண, ருண,ரோக சத்ரு ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார்.

அக்டோபர் 3 ந்தேதி ரண, ருண,ரோக சத்ரு ஸ்தானத்தில் இருந்த புதன் பகவான் களத்திரஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். மேலும் அக்டோபர் 4 ந்தேதி இரவு களத்திரஸ்தானத்தில் இருந்த குருபகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். அக்டோபர் 11ந்தேதி களத்திரஸ்தானத்தில் இருக்கும் சுக்கிரபகவான் வக்கிரம் ஆகிறார்.

பலன்: உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மேஷ ராசி அன்பர்களே! இந்த மாதம் குடும்பத்தில் சுப காரியம் நடக்கும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளின் செயல்பாடுகளில் கவனம் தேவை. உறவினர்கள் மூலம் நன்மை உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் சேரும்.

குடும்பத்தில் சந்தோஷம் குடி கொண்டிருக்கும். இம்மாத குருபெயர்ச்சிக்குப் பிறகு குருபகவான் உங்கள் ராசிக்கு இரண்டாம் இடமான தனம், குடும்பம், வாக்கு ஸ்தானத்தை பார்ப்பதால் குடும்பத்தில் இருந்த இன்னல்கள் மறையும். பனிரெண்டாம் இடமாகிய விரய ஸ்தானத்தைப் பார்ப்பதால் சுபவிரயங்கள் உண்டாகலாம்.

தொழில் ஸ்தானத்தில்முக்கிய முடிவுகள் எடுக்கும் போது பங்குதாரர்களை அனுசரித்து செல்வது மிக அவசியம். அவர்களே உங்கள் வழிக்கு வர தயாராக இருப்பார்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் அதிகமாக உழைக்க வேண்டி வரலாம். சக பணியாளர்கள் பொறாமையில் உங்களை எறிச்சலடையச் செய்வார்கள். பொறுமையைக் கையாளுங்கள்.

பெண்கள் உங்கள் சிந்தனை ஒன்று செயல் ஒன்றாக இருக்கும். செய்யும் வேலையில் கவனமாக இருக்கவும். மாணவர்கள் ஆசிரியரின் நன்மதிப்பை பெறுவீர்கள். கல்வியில் நல்ல முன்னேற்றம் அடைவீர்கள்.

கலைத்துறையினருக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கைநழுவி போகலாம். மற்றவர்கள் பாராட்டுக்கு மயங்கி எந்தவொரு நிகழ்விலும் நிதானத்தை இழக்க வேண்டாம். கடன்கள் கட்டுக்குள் இருக்கும்.

அரசியல் வாதிகளுக்கு கிடைக்க வேண்டிய பதவி, பொறுப்புகள் உங்களையே வந்தடையும். எதிர்பார்த்த ஒவ்வொரு விசயங்களிலும் நன்மையே கிட்டும். எதிரிகளைவிட உடனிருப்போரிடம் கவனம் வையுங்கள். குலதெய்வத்தை வழிபட்டு காரியங்களை வெற்றியுடன் நடத்தி வாருங்கள்.

அஸ்வினி: இந்த மாதம் குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும். யாரிடமும் எதிர்த்து பேசி விரோதத்தை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது நன்மை தரும். கணவன் மனைவிக்கிடையே இருந்த பிரிவு நீங்கி ஒன்று சேர்வார்கள். பிள்ளைகள் எதிர்காலம் பற்றிய எண்ணம் மேலோங்கும்.

பரணி: இந்த மாதம் சோர்வில்லாமல் எப்போதும் உற்சாகமாக காணப்படுவீர்கள். உல்லாச பயணங்கள் செல்ல நேரலாம். நற்பெயரும் புகழும் உண்டாகும். புண்ணிய காரியங்களில் ஈடுபாடு இருக்கும். வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பங்களை சந்திக்க நேரலாம். எப்படிப்பட்ட பிரச்சனை வந்தாலும் சமாளித்துவிடும் திறமை இருக்கும்.

கார்த்திகை 1ம் பாதம்: இந்த மாதம் எந்த செயலையும் தைரியமாக செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத திடீர் செலவுகள் வீண் அலைச்சல் உண்டாகலாம். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் கஷ்டமான பாடங்களையும் மனம் துவளாமல் படிப்பீர்கள்.

பரிகாரம்: சனிக்கிழமைகளில் சிவன் கோவிலை வலம் வரவும். சந்திராஷ்டம தினங்கள்: செப்டம்பர் 17; அக்டோபர் 12, 13, 14. அதிர்ஷ்ட தினங்கள்: அக்டோபர் 6, 7. அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்.

ரிஷபம்
அக்டோபர் 3 ந்தேதி பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருந்த புதன் பகவான் ரண, ருண, ரோக ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். மேலும் அக்டோபர் 4 ந்தேதி இரவு ரண, ருண, ரோக ஸ்தானத்தில் இருந்த குருபகவான் களத்திர ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். அக்டோபர் 11ந்தேதி ரண, ருண, ரோக ஸ்தானத்தில் இருக்கும் சுக்கிரபகவான் வக்கிரம் ஆகிறார்.

பலன்: நம்பிக்கையுடன் காரியங்களில் ஈடுபட்டு வெற்றி காணும் ரிஷபராசி அன்பர்களே! இந்த மாதம் மற்றவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைப்பதில் கவனம் தேவை. புத்தி சாதூரியத்துடன் காரியங்களை செய்து மற்றவர்களின் பாராட்டைப் பெறுவீர்கள். எதிர்பார்த்த பணம் வரலாம். எதிர்ப்புகள் விலகும். எந்த காரியம் செய்தாலும் தாமதம் உண்டாகும்.

குடும்பத்தில் உங்களுக்கு லாபம் உண்டாகும். உடல்நிலையில் அவ்வப்போது கவனம் செலுத்த வேண்டி வரலாம். ஆனால் பெரிய பாதிப்பு ஒன்றும் வராது. முக்கிய நபர்களிடம் கலந்துரையாடும் போது கவனம் தேவை. ஆறாமிடமான ரண, ருண, ரோக ஸ்தானத்தில் சுக்கிர பகவான் அமர்ந்திருப்பதாலும் அவரே உங்கள் ராசி அதிபதியாகியதாலும் உங்களது கடன் தொல்லையிலிருந்து விடுபடுவீர்கள். புதிய கடன்களை வாங்கி பழைய கடன்களை அடைப்பீர்கள்.

தொழிலில் எந்த மாற்றமும் இப்போதைக்கு வேண்டாம். புதிய முயற்சிகளையும் செய்ய வேண்டாம். சுமூகமாக சென்று கொண்டிருக்கும். தொழிலில் கீர்த்தி உண்டாகும்.

உத்தியோகஸ்தர்கள் நீண்ட நாளைய பதவி உயர்வை இப்போது எதிர்பார்க்கலாம். சிலர் தேவையான உதவிகளை கேட்டு பெற வேண்டியிருக்கும். பெண்கள் உற்சாகமாக செயல்பட வாய்ப்புள்ளது. குடும்பத்தில் நற்பெயர் எடுப்பதற்கு அதிகமாக உழைக்க வேண்டி வரலாம். மாணவர்கள் பொறுமையுடனும், நிதானத்துடனும் நடந்து கொள்ள வேண்டும். மேற்படிப்பை தொடர முயற்சி செய்யுங்கள்.

கலைத் துறையினருக்கு பெரிய சிக்கலில் மாட்டிக் கொண்டிருந்தவர்கள், சிறுசிறு துன்பங்களுக்கு ஆட்பட்டவர்கள் கூட இப்பொழுது சிரமங்கள் இல்லாத வாழ்க்கையை பெறமுடியும். புதிய வாய்ப்புகளை சரியான ஆட்களிடமிருந்து சரியான தருணத்தில் கிடைக்கப் பெற்று முன்னேறப் போகிறீர்கள்.

அரசியல்வாதிகள் கடந்த கால தவற்றை எண்ணாமல் புதிய முயற்சிக்கு வித்திடுவீர்கள். மன உலைச்சலால் ஆரோக்கியத்தில் பிரச்சனை ஏற்படலாம். மனதை தைரியமாக வைத்துக் கொள்ளுங்கள்.

கார்த்திகை 2, 3, 4 பாதம்: இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் வியாபார வளர்ச்சிக்காக துணிச்சலுடன் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற வாய்ப்புகள் வந்து சேரும். சக ஊழியர்கள் மேல் அதிகாரிகளின் ஆதரவுடன் பணிகளை திறமையாக செய்து முடிப்பீர்கள்.

ரோகிணி: இந்த மாதம் குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளின் செயல்பாடுகள் திருப்திகரமாக இருக்கும். மனவருத்தத்துடன் சென்ற உறவினர்கள் வருத்தம் நீங்கி மீண்டும் வந்து சேருவார்கள்.

மிருக சிரீஷம் 1, 2, பாதம்: இந்த மாதம் பயணங்கள் செல்ல நேரிடும். எந்த பிரச்சனை வந்தாலும் அதை சமாளிக்கும் திறமை உண்டாகும். அடுத்தவர்களின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காணப்படும். விளையாட்டு போட்டிகளில் வெற்றி வாய்ப்பு உண்டாகும்.

பரிகாரம்: அருகிலிருக்கும் நவக்கிரக கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்யவும்.

சந்திராஷ்டம தினங்கள்: செப்டம்பர் 18, 19; அக்டோபர் 15, 16.

அதிர்ஷ்ட தினங்கள்: அக்டோபர் 8, 9.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி.

மிதுனம்

(மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்). கிரக நிலைகள்: செப்டம்பர் மாதம் 17 ந் தேதி இதுவரை உங்கள் ராசிக்கு தைரிய, வீரிய ஸ்தானத்தில் இருந்த சூரிய பகவான் சுக ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். அக்டோபர் 3 ந்தேதி சுக ஸ்தானத்தில் இருந்த புதன் பகவான் பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார்.

மேலும் அக்டோபர் 4 ந்தேதி இரவு பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருந்த குருபகவான் ரண, ருண, ரோக ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். அக்டோபர் 11ந்தேதி பூர்வ, புண்ணிய ஸ்தானத்தில் இருக்கும் சுக்கிரபகவான் வக்கிரம் ஆகிறார்.

பலன்: எல்லாவற்றிலும் ஒரு பயத்துடனே செயல்படும் மிதுன ராசி அன்பர்களே! இந்த மாதம் புதியநபர்களின் நட்பு உண்டாகும். வீடு வாகனம் தொடர்பான விஷயங்களில் கூடுதல் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் மெத்தனமான போக்கு காணப்படும்.

குடும்பத்தில் சில சட்டச் சிக்கல்கள் வந்து போகும். உறவினர் வருகையால் கலகம் உண்டாகும். இந்த மாதம் குருபெயர்ச்சிக்கு முன்னதாக உங்கள் பிரச்சினைகளை குருபகவான் தீர்த்து விட்டு நகருவார். அதன்பின் உங்களுக்கு நன்மைகள் ஏராளமாய் நடக்கும். பொருளாதார நிலையில் நீண்ட நாட்களாக வர வேண்டிய பணம் இப்போது கைக்கு வந்து சேரும்.

தொழில் ஸ்தானத்தில் சூரியன், புதன் ஆகியோரின் பார்வை படுவதால் தொழிலில் புதிய யுக்திகளை கற்றுக் கொள்வீர்கள். தொழிலை கையாளும் போது அது உங்களுக்கு சாதகமாகும்.

உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். சிலர் உங்களை மேலிடத்தில் குறை கூற வாய்ப்புண்டு கவனம் தேவை. பெண்கள் விரும்பிய ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். உங்கள் உறவினர்கள் உறுதுணையாக இருப்பார்கள். மாணவர்களுக்கு படிப்பில் இருந்த தடைகள் நீங்கும். எதிர்பாலினத்தாரிடம் தேவையில்லாத வாக்கு வாதங்களில் ஈடுபட வேண்டாம்.

கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவீர்கள். நல்ல சூழ்நிலைகள் அமையப் பெற்று அதனால் மன மகிழ்ச்சி உண்டாகலாம். மூத்த கலைஞர்கள் நல் ஆசி வழங்குவார்கள். உங்கள் பேச்சுக்கு மதிப்பு இருக்கும்.

அரசியல்வாதிகள் அரசு சம்மந்தமான பிரச்சனைகளை மற்றவருடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பது நல்லது. யாரிடமும் எதைப்பற்றியும் விவாதிக்க வேண்டாம். சில விஷமிகளின் தொந்தரவு இருந்தாலும் சுலபமாக சமாளித்து விடுவீர்கள்.

மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள்: இந்த மாதம் எதிலும் கவனமாக இருப்பது நல்லது. காரிய தடை தாமதம் நீங்கும். குடும்பத்தில் இருக்கும் குழப்பம் நீங்கும். விருப்பத்திற்கு மாறாக காரியங்கள் நடக்கலாம். பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. அடுத்தவருடன் சில்லறை சண்டைகள் ஏற்படலாம்.

திருவாதிரை: இந்த மாதம் வயிறு தொடர்பான நோய் ஏற்படலாம். பணவரத்து இருக்கும். பயணங்கள் மகிழ்ச்சி தருவதாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

புனர்பூசம் 1, 2, 3 பாதம்: இந்த மாதம் குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்பாடுகள் உங்களது கோபத்தை தூண்டுவதாக இருக்கலாம். அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் முன்னேற்றத்திற்காக பாடுபடுவீர்கள்.

பரிகாரம்: வியாழக்கிழமைகளில் சிவன் கோவிலை வலம் வரவும்.

சந்திராஷ்டம தினங்கள்: செப்டம்பர் 20, 21; அக்டோபர் 17.

அதிர்ஷ்ட தினங்கள்: அக்டோபர் 10, 11.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வியாழன்.

கடகம்

(புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்). கிரக நிலைகள்: செப்டம்பர் மாதம் 17 ந் தேதி இதுவரை உங்கள் ராசிக்கு தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் இருந்த சூரிய பகவான் தைரிய, வீர்ய ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். அக்டோபர் 3 ந்தேதிதைரிய, வீர்ய ஸ்தானத்தில் இருந்த புதன் பகவான் சுகஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார்.
மேலும் அக்டோபர் 4 ந்தேதி இரவு சுக ஸ்தானத்தில் இருந்த குருபகவான் பூர்வ, புண்ணிய ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். அக்டோபர் 11ந்தேதி சுக ஸ்தானத்தில் இருக்கும் சுக்கிரபகவான் வக்கிரம் ஆகிறார்.

பலன்: சக ஊழியர்களின் ஒத்துழைப்பிற்காக காத்துக் கொண்டிருக்கும் கடக ராசி அன்பர்களே!. இந்த மாதம் குடும்பத்தில் இருப்பவர்களால் நிம்மதி உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவதன் மூலம் முக்கியமான காரியங்களில் நல்ல முடிவு எடுக்க முடியும். சொத்துக்கள் வாங்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும்..

குடும்பாதிபதி சூரியன் தைரிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் கணவரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இளைய சகோதரர்கள் உங்கள் பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். பிள்ளைகளின் கல்வி நலனுக்காக ஒரு தொகை செலவிட நேரலாம்.

தொழில் ஸ்தானத்தை புதன், குரு, சுக்கிரன் ஆகிய கிரகங்களின் பார்வை இருப்பதால் பணவரவு எதிர்பார்ப்பதை விட அதிகமாக இருக்கும். வெளியூர், வெளிநாடு பயணங்கள் சென்றுவர வேண்டியிருக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு கண்டிப்பாக உண்டு. மேலதிகாரிகளுக்கும் உங்களுக்கும் இருந்த மனக்கசப்புகள் நீங்கி நல்லுறவு ஏற்பட வாய்ப்புண்டு.

பெண்கள் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சில முக்கிய காரியங்கள் குடும்பத்தில் உங்கள் மூலமாக நடப்பதற்கு வாய்ப்புண்டு.

மாணவச் செல்வங்களுக்கு தேவையான அனைத்தும் கிடைக்கப் பெறும். தொழில் படிப்புகள் படிப்பவர்களுக்கு நல் எதிர்காலம் உண்டு.

கலைத்துறையினருக்கு அதிர்ஷ்டத்தை அனுபவிக்க வேண்டிய கால கட்டம். ஆபரணச் சேர்க்கை உண்டு. பணம் பலவகைகளிலும் வரும். கடன்கள் கட்டுக்குள் இருக்கும். உடனிருப்போரின் தொந்தரவு அதிக கவனம் தேவை.

அரசியல்வாதிகள் வழக்கு, விவாதங்களில் கவனம் தேவை. உங்களின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்கள் மீது சந்தேகம் வரலாம். ஆனால் அது உண்மை இல்லை என்று தெரிய வரும். சிலர் மீது கோபப் பட வேண்டி வரும். கோபத்தை கட்டுப்படுத்தினால் மகிழ்ச்சி அடையலாம்.

புனர் பூசம் 4ம் பாதம்: இந்த மாதம் காரிய தடையால் மனகுழப்பம், டென்ஷன் உண்டாகலாம். பணவரத்து இருக்கும். மாணவர்கள் யாரிடமும் வாக்குவாதம் செய்யாமல் அனுசரித்து செல்வது நல்லது. மிகவும் கவனமாக பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும்.

பூசம்: இந்த மாதம் தடை தாமதம், வீண் அலைச்சல் இருக்கும். கவனமாக செயல்படுவது நல்லது. பணவரத்து எதிர்பார்த்ததை விட கூடுதலாக வரும். பேச்சின் இனிமை சாதூர்யத்தால் எடுத்த காரியத்தை திறம்பட செய்து முடிப்பீர்கள். அக்கம்பக்கத்தினரிடம் சில்லறை சண்டைகள் உண்டாகலாம். எதையும் சமாளிக்கும் மனநிலை ஏற்படும்.

ஆயில்யம்: இந்த மாதம் தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் சிறு தடங்கல்கள் உண்டாகலாம். பார்ட்னர் மூலம் நன்மை உண்டாகும். நிதி உதவி எதிர்பார்த்தபடி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைத்து அலுவலக பணிகளை முடிக்க வேண்டி இருக்கும்.

பரிகாரம்: சித்தர்கள் ஜீவ சமாதியை வழிபட்டு தியானம் செய்யுங்கள்.

சந்திராஷ்டம தினங்கள்: செப்டம்பர் 22, 23,24.

அதிர்ஷ்ட தினங்கள்: செப்டம்பர் 17; அக்டோபர் 12, 13, 14.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி.

சிம்மம்

அக்டோபர் 3 ந்தேதி தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் இருந்த புதன் பகவான் தைரிய, வீர்ய ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். மேலும் அக்டோபர் 4 ந்தேதி இரவு தைரிய, வீர்ய ஸ்தானத்தில் இருந்த குருபகவான் சுக ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். அக்டோபர் 11ந்தேதி தைரிய, வீர்ய ஸ்தானத்தில் இருக்கும் சுக்கிரபகவான் வக்கிரம் ஆகிறார்.

பலன்: மனகவலை நீங்கும் படியான சூழ்நிலையை விரும்பும் சிம்ம ராசி அன்பர்களே! இந்த மாதம் வாக்குவாதங்கள் மற்றும் அடுத்தவர் பற்றிய விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. பணவரத்து கூடும். சாமர்த்தியமான செயல்களால் மதிப்பும், அந்தஸ்தும் உயரும் உற்சாகம் உண்டாகும்.

குடும்பாதிபதி புதன் பகவான் குரு, சுக்ரனுடன் இணைந்து இருப்பதால் ஆன்மீக காரியங்களில் ஈடுபடுவீர்கள். கோவில்களுக்குச் சென்று வருவீர்கள். குடும்பத்தில் தவறு செய்பவர்களுக்கு அதை சுட்டிக்காட்டு சரி செய்வீர்கள். எதிர்பாலினத்தாரால் சிலருக்கு ஆதாயம் கிடைக்கும். தந்தை மற்றும் தந்தை வழி உறவினர்களால் நன்மை ஏற்படும். தந்தையின் உடல் நிலையில் முன்னேற்றம் இருக்கும்.

தொழில் ஸ்தானாதிபதி ஆட்சியாக இருப்பதுடன் புதன் மற்றும் குருவுடன் இணைந்து இருப்பது உங்களுக்கு யோகமான காலமாக இருக்கும். இதை பயன்படுத்திக் கொள்வதன் மூலம் உங்கள் தொழிலில் ஒரு முக்கிய காலமாக இது இருக்கும்.

உத்யோகஸ்தர்கள் விண்ணப்பித்திருந்த கடன் தொகை கிடைக்கப் பெறுவீர்கள். இதனால் உங்களின் நீண்ட நாளைய பிரச்சனைகள் தீரும். பெண்களுக்கு அவர்களின் சகோதர, சகோதரிகளின் மூலம் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். பொருளாதார பிரச்சனைகள் தீரும். மாணவ மாணவியர் தங்கள் நிலை உயர அரும்பாடுபட்டு முயற்சி செய்வீர்கள். கல்விச் சுற்றுலா சென்று வருவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள்.

கலைத்துறையினருக்கு ஓய்வில்லாமல் உழைத்து நல்ல புகழை பெற வேண்டிய கால கட்டம். உடன் இருப்பவர்களை கண் காணிக்க வேண்டி வரும். திறமை சாலிகள் உங்களைத் தேடிக் கொண்டு வருவார்கள்.

அரசியல்வாதிகள் பிறர் பேச்சுகளை நம்பி ஏமார வேண்டிய சூழ்நிலை உருவாகலாம். எதிலும் கவனம் தேவை. அலைச்சல் அதிகம் ஏற்படக் கூடும் ஆகையால் நேரத்திற்கு உணவருந்தி ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்.

மகம்: இந்த மாதம் குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வதன் மூலம் நல்லபலன் கிடைக்கும். பிள்ளைகள் உங்களது கருத்துக்களை கேட்டு அதன்படி நடப்பது மனதுக்கு மகிழ்ச்சியை தரும்.

பூரம்: இந்த மாதம் சாமர்த்தியமான பேச்சின் மூலமும் சூழ்நிலையை புரிந்து கொண்டு நடப்பதன் மூலமும் காரிய அனுகூலம் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றமடைய கூடுதலாக நேரம் எடுத்துக்கொண்டு கவனத்தை சிதற விடாமல் படிப்பது அவசியம்.

உத்திரம் 1ம் பாதம்: இந்த மாதம் புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது. காரிய தடை தாமதம் அலைச்சல் இருக்கும். நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியம் பெறும். பணவரத்து எதிர்பார்த்ததை விட அதிகரிப்பது மனமகிழ்ச்சியை தரும். எதிரிகளால் இருந்து வந்த பிரச்சனை தீரும். நண்பர்கள் மூலம் தேவையான உதவிகள் கிடைக்கும்.

பரிகாரம்: திங்கட்கிழமை தோறும் சிவ பெருமானுக்கு விளக்கேற்றி வழிபடுங்கள்.

சந்திராஷ்டம தினங்கள்: செப்டம்பர் 25, 26.

அதிர்ஷ்ட தினங்கள்: செப்டம்பர் 18, 19; அக்டோபர் 15, 16.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், செவ்வாய்.

கன்னி

அக்டோபர் 3 ந்தேதி ராசியில் இருந்த புதன் பகவான் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். மேலும் அக்டோபர் 4 ந்தேதி இரவு தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் இருந்த குருபகவான் தைரிய, வீர்ய ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். அக்டோபர் 11ந்தேதி தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் இருக்கும் சுக்கிரபகவான் வக்கிரம் ஆகிறார்.

பலன்: புதிய வேலையை திட்டமிடுவதில் வல்லவராக திகழும் கன்னி ராசி அன்பர்களே! இந்த மாதம் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.தொழில் வியாபாரம் லாபகரமாக நடக்கும். போட்டிகள் விலகும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு முன்னேற்றம் காண்பீர்கள்.

ராசிக்கு குடும்பாதிபதியான சுக்கிரன் அவருடைய சொந்த ராசியிலேயே ஆட்சி பலம் பெற்றிருப்பதால் குடும்பத்தில் அனைவரும் ஒற்றுமையுடன் இருப்பார்கள். பங்காளிகள் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். இளைய சகோதரர்கள் உங்கள் பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். தாயாரின் உடல்நிலையில் முன்னேற்றம் உண்டாகும்.

தொழிலைப் பொறுத்தவரையில் ஆதாயம் அதிகமாக கிடைக்கப் பெறுவீர்கள். சிறு வியாபாரம் செய்பவர்கள் கூட நல்ல உன்னதமான நிலையை எட்டுவீர்கள். உங்கள் தனாதிபதி சுக்கிரன் ஆட்சியாக இருப்பதால் பணவரவு தாராளாக இருக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் அதிகமாக உழைக்க வேண்டிவரும். வெளியூர் பயணங்கள் உங்களுக்கு ஆதாயத்தைத் தரும். அதிகாரிகளுக்கு நல்ல சன்மானம் கிடைக்கப் பெறுவீர்கள்.

பெண்கள் சுபச் செலவுகள் செய்ய வேண்டிவரலாம். உடன்பிறந்தவருக்கு உதவி செய்வீர்கள்.பிள்ளைகள் விசயத்தில் நற்செய்திகள் வரும். மாணவச் செல்வங்களுக்கு நற்பெயர் கிடைக்கும். உற்சாகமான பணிகளில் ஈடுபடுவீர்கள். கல்வி அல்லாத பிற துறைகளிலும் சாதிக்க முயலுவீர்கள். கலைத் துறையினருக்கு அனுகூலமான தகவல்கள் கிடைக்கப் பெறுவீர்கள். நன்மதிப்பும், மரியாதையும் கிட்டும். பல மங்களகரமான நிகழ்வுகள் நடைபெறலாம். உங்களுக்கு நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பலவழிகளிலிருந்தும் பண வரவுகள் வரலாம்.

அரசியல்வாதிகள் மூத்த தலைவர் ஒருவரால் நீங்கள் புகழப்படுவீர்கள். உடனிருப்போரின் தகுந்த ஒத்துழைப்பை பெற முயற்சிப்பீர்கள். தகுந்த கவனத்துடன் செயல் படுங்கள் ஆதாயம் கிட்டும்.

உத்திரம் 2, 3, 4 பாதம்: இந்த மாதம் தொழில் வியாபாரம் தொடர்பான பயணங்கள் மேற்கொள்ள வேண்டி இருக்கும். இனிமையான பேச்சின்மூலம் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலக பணி தொடர்பான அலைச்சல் இருக்கும்.

அஸ்தம்: இந்த மாதம் குடும்பத்தில் உங்களது பேச்சுக்கு எதிர்பேச்சு பேசியவர்கள் அடங்கி விடுவார்கள். கணவன், மனைவிக் கிடையில் மகிழ்ச்சி நீடிக்கும். பிள்ளைகள் தொடர்பான காரியங்களை செய்து முடிக்க அலைய வேண்டி இருக்கும். உங்களது செயல்களுக்கு இருந்த முட்டுகட்டைகள் விலகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

சித்திரை 1, 2, பாதம்: இந்த மாதம் மாணவர்களுக்கு கல்வியில் திறமை வெளிப்படும். கல்வியில் வெற்றி பெற தேவையான உதவிகள் கிடைக்கும். புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது. காரிய தடை, தாமதம், வீண் அலைச்சல் உண்டாகும். மனக்கவலை ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத செலவு ஏற்படும்.

பரிகாரம்: ஸ்ரீ ராமபிரானை வணங்கி சுந்தர காண்டம் படியுங்கள்.

சந்திராஷ்டம தினங்கள்: செப்டம்பர் 27, 28, 29.

அதிர்ஷ்ட தினங்கள்: செப்டம்பர் 20, 21; அக்டோபர் 17.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி.

துலாம்

அக்டோபர் 3 ந்தேதி அயன,சயன, போக ஸ்தானத்தில் இருந்த புதன் பகவான் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். மேலும் அக்டோபர் 4 ந்தேதி இரவு ராசியில் இருந்த குருபகவான் தனம், குடும்ப ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். அக்டோபர் 11ந்தேதி ராசியில் இருக்கும் சுக்கிரபகவான் வக்கிரம் ஆகிறார்.

பலன்: கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்கும் துலாராசி அன்பர்களே! இந்த மாதம் குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை அனுசரித்து செல்வார்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த பிரச்சனைகள் தீரும். பிள்ளைகள் மூலம் பெருமை உண்டாகும். எதிர்பாராத பணவரத்து இருக்கும். மனக்கவலை நீங்கி உற்சாகம் உண்டாகும்.

ராசியாதிபதி சுக்ரன் ராசியிலேயே குருவுடன் சஞ்சாரம் செய்வதால் குடும்பத்தில் விஷேஷங்கள் இனிதே நடக்கும். எனினும் குடும்பாதிபதி செவ்வாய், கேதுவுடன் இணைந்து இருப்பதால் வார்த்தைகளில் சிறிது கவனம் அவசியம். நீங்கள் சொல்வதற்கு மாறாக புரிந்து கொண்டு மனசங்கடங்கள் உருவாகலாம். கவனம் தேவை.

தொழில் ஸ்தானத்தை செவ்வாய் மற்றும் கேது பகவான் பார்ப்பதால் வார்த்தைகளில் கவனம் அவசியம். முடிந்தவைகளுக்கு மட்டும் வாக்கு கொடுங்கள். அதையும் ஒரு முறைக்கு இருமுறை யோசனை செய்து கொடுக்கவும்.

உத்யோகஸ்தர்களுக்கு மனதில் சில சஞ்சலங்கள் ஏற்படலாம். முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றம் வரலாம். சிறுது காலத்திற்கு ஒத்து வைத்து தீர ஆலோசித்து முடிவெடுப்பது நன்மை தரும். வர வேண்டிய பணம் கைக்குக் கிடைக்கும்.

பெண்களுக்கு பணப்பிரச்சனைகள் தீரும். கல்வி சம்பந்தமான தடைபட்டிருந்த காரியங்கள் இனிதே நடக்கும். குடும்பத்தில் சந்தோஷத்திற்கு குறைவிருக்காது. மாணவர்களுக்கு ஆசிரியர்கள் உதவி செய்வார்கள். நீங்கள் பாடங்களைப் புரிந்து கொள்வது எளிதாக இருக்கும். தேர்வுகளிலும் நல்ல மதிப்பெண் பெறுவீர்கள்.

கலைத்துறையினருக்கு ஆரோக்கிய குறைபாடுகளால் உங்கள் வேலையை தக்க நேரத்தில் முடிக்க முடியாமல் போகலாம். தக்க நேரத்தில் மருத்துவ ஆலோசனை பெற்றுக் கொள்ளுங்கள். அரசியல்வாதிகள் ஆதாயம் கிடைக்க நல்லோர் உடன் இருத்தல் வேண்டும். நம்மவர் என்று எண்ணி எதிலும் யாரையும் நம்பி ஏமாற வேண்டாம். அரசு விவகாரங்களில் பொறுமையாக கையாள வேண்டிய விசயங்கள் அனைத்தையும் அப்படியே சற்று தள்ளிப்போடுவது உத்தமம்.

சித்திரை 3, 4 பாதம்: இந்த மாதம் மற்றவர்களுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பதால் பகை ஏற்படாமல் இருக்கும். எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் பாராட்டு கிடைப்பது அரிது. சிலரது எதிர்பாராத பேச்சு மனவருத்தத்தை தரலாம் கவனம் தேவை.

சுவாதி: இந்த மாதம் தொழில் வியாபாரம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கும் போது தீர ஆலோசித்தபின் முடிவு எடுப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள், சக ஊழியர்களின் கருத்துக்கு மாற்று கருத்து சொல்லாமல் இருப்பது நன்மை தரும்.

விசாகம் 1, 2, 3ம் பாதம்: இந்த மாதம் குடும்பத்தில் இருப்பவர்களுடன் கருத்து மோதல் உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே இருந்த பூசல்கள் சரியாகும். பிள்ளைகளுக்கு தேவையன பொருட்களை வாங்குவது மற்றும் அவர்களது நலனுக் காக பாடுபட வேண்டியும் இருக்கும்.

பரிகாரம்: நவகிரக புதன் பகவானுக்கு பச்சை பயறு நெய்வேத்யம் செய்து வருவது நல்லது.

சந்திராஷ்டம தினங்கள்: செப்டம்பர் 30; அக்டோபர் 1.

அதிர்ஷ்ட தினங்கள்: செப்டம்பர் 22, 23,24.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி.

விருச்சிகம்

(விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை). கிரக நிலைகள்: செப்டம்பர் மாதம் 17 ந் தேதி இதுவரை உங்கள் ராசிக்கு தொழில் ஸ்தானத்தில் இருந்த சூரிய பகவான் லாப ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். அக்டோபர் 3 ந்தேதி லாப ஸ்தானத்தில் இருந்த புதன் பகவான் அயன, சயன, போக ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார்.

மேலும் அக்டோபர் 4 ந்தேதி இரவு அயன, சயன, போக ஸ்தானத்தில் இருந்த குருபகவான் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அக்டோபர் 11ந்தேதி அயன, சயன,போக ஸ்தானத்தில் இருக்கும் சுக்கிரபகவான் வக்கிரம் ஆகிறார்.

பலன்: தன்னம்பிக்கை அதிகமாக இருக்கும் விருச்சிக ராசி அன்பர்களே! இந்த மாதம் குடும்ப பிரச்சனை தீரும். எதிலும் கவனமாக இருப்பது நல்லது. ஏதேனும் மனகஷ்டம் உண்டாகும். வீண்செலவு ஏற்படும். உடல் சோர்வு வரலாம். மனோ தைரியம் கூடும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

குடும்பஸ்தானத்தில் பகை கிரகமான சனி பகவான் இருந்தாலும், மாதத்தின் பிறபகுதியில் குரு பகவான் உங்கள் ராசிக்கு வருவதால் குடும்பத்தில் மகிழ்ச்சி தலைகாட்ட ஆரம்பிக்கும். ஒவ்வொருவராக அவரவர் தவறுகளை உணர்ந்து மன்னிப்புக் கேட்பதன் மூலம் குடும்பத்தில் சந்தோஷம் நிலவும்.

தொழில் ஸ்தானாதிபதி சூர்ய பகவான் இந்த மாதம் லாப ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வதால் தொழிலில் லாபம் அதிகரிக்கும். புதிய ஆர்டர்கள் கிடைக்கப் பெறுவீர்கள். கூட்டுத் தொழில் செய்பவர்கள் முன்னேற்றம் காண்பர். உத்யோகஸ்தர்களுக்கு வரவேண்டிய பணம் கைக்கு கிடைக்கும். நீண்ட நாட்களாக சம்பளம் கிடைக்காமல் இருந்தவர்களுக்கு சம்பளம் கிடைக்கும். இதனால் மனமகிழ்ச்சி கிடைக்கும்.

பெண்களுக்கு மனதில் நிம்மதி கிடைக்கும். உங்களைப் புரிந்து கொள்ளாமல் பேசியவர்கள் உங்களின் முக்கியத்துவத்தை உணருவார்கள். மாணவர்களுக்கு அனுகூலமான மாதம். உதவித் தொகை கிடைக்கும். பெரியவர்கள் உங்களைப் புரிந்து கொண்டு உங்களுக்கு தேவையானதை வாங்கித் தருவார்கள்.

கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடிவரும். கிடைக்கும் வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்வது புத்திசாலித்தனம். உடனிருப்பவர்களை ஆலோசித்து காரியங்களை முன்னெடுப்பது உங்கள் வெற்றிக்குத் தடை வராமல் காக்கும்.

அரசியல் துறையினருக்கு சாதகமான காலகட்டமாக இருந்தாலும் புத்திக்கூர்மையுடன் செயல்களை ஆராய்ந்து செய்வது நன்மை பயக்கும். மேலிடத்திற்கும் உங்களுக்கும் தேவையற்ற வாக்குவாதம் வரலாம்.

விசாகம் 4ம் பாதம்: இந்த மாதம் கருத்துக்கு சிலர் மாற்று கருத்து கூறலாம். எதிர்த்து பேசாமல் அமைதியாக இருப்பது நல்லது. மாணவர்களுக்கு எவ்வளவு திறமையாக படித்தாலும்பாடங்கள் கடினமானவை போல தோன்றும். மனதை தளரவிடாமல் படிப்பது வெற்றியை தரும்.

அனுஷம்: இந்த மாதம் அடுத்தவருடன் ஏற்படும் பிரச்சனைகளிலும் வாக்குவாதத்திலும் வெற்றியே கிடைக்கும். பணவரத்தும் கூடும். ஆனால் எந்த காரியத்தில் ஈடுபட்டாலும் அடுத்தவரை நம்புவதிலும் எச்சரிக்கை தேவை. உங்களுக்கு மிகவும் வேண்டியவர் உங்களை விட்டு விலகி செல்லலாம்.

கேட்டை: இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த பணவரவு இருக்கும். போட்டிகள் குறையும் புதிய முயற்சிகளில் ஈடுபட தோன்றும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் செய்யும் பணிகள் திருப்திகரமாக நடந்து முடியும். எதிர்பார்த்த இடமாற்றம் வரலாம்.

பரிகாரம்: நரசிம்மருக்கு மல்லிகை மலர் வாங்கிக் கொடுக்க பயணத்தில் தடைகள் அகலும்.

சந்திராஷ்டம தினங்கள்: அக்டோபர் 2, 3.

அதிர்ஷ்ட தினங்கள்: செப்டம்பர் 25, 26.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்). கிரக நிலைகள்: செப்டம்பர் மாதம் 17 ந் தேதி இதுவரை உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானத்தில் இருந்த சூரிய பகவான் தொழில் ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். அக்டோபர் 3 ந்தேதி தொழில் ஸ்தானத்தில் இருந்த புதன் பகவான் லாப ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார்.

மேலும் அக்டோபர் 4 ந்தேதி இரவு லாப ஸ்தானத்தில் இருந்த குருபகவான் அயன,சயன, போக ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். அக்டோபர் 11ந்தேதி லாப ஸ்தானத்தில் இருக்கும் சுக்கிரபகவான் வக்கிரம் ஆகிறார்.

பலன்: ஆடம்பரமாக வாழ ஆசைப்படாத தனுசு ராசி அன்பர்களே! இந்த மாதம் தொழிலில் அபரிவிதமான வெற்றிகளை எதிர்பார்க்கலாம்.. உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி நிமித்தமாக அலைய வேண்டி இருக்கும். சொத்துகள் வாங்க முடிவு செய்வீர்கள்.

குடும்பாதிபதி சனி பகவான் ராசியிலேயே சஞ்சாரம் செய்வதால் கணவன் – மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பஸ்தானத்தில் இருக்கும் செவ்வாய் மற்றும் கேது பகவான் சேர்க்கை உங்கள் குடும்ப நிம்மதியை குலைக்கலாம். கவனம் தேவை.நீங்கள் சொல்ல விரும்புவதை தெளிவாக அனைவருக்கும் புரியும் வகையில் சொல்வது பிரச்சனைகளைத் தவிர்க்கும்.

தொழில் ஸ்தானத்தில் சூர்ய பகவான் இருப்பதால் நீங்கள் எடுக்கும் முடிவுகள் லாபம் தரும் வகையிலேயே இருக்கும். புதிய தொழில் தொடங்குபவர்களுக்கும் யோகமான காலமாக இருக்கும். பெண்கள் சம்பந்தப்பட்ட பொருட்களை விற்பவர்களுக்கும் லாபம் கிடைக்கும்.

உத்யோகஸ்தர்களுக்கு வர வேண்டிய பணம் வந்து சேரும். சிலருக்கு எதிர்பார்த்திருந்த சம்பள உயர்வு கிடைக்கும். குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். பெண்களுக்கு கணவனுடன் இருந்து வந்த மனசங்கடங்கள் குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகளுக்குத் தேவையானதை வாங்கிக் கொடுத்து மகிழ்வீர்கள். மாணவர்கள் – ஆசிரியர் உறவு சுமூகமாக இருக்கும். இதனால் கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு. பொறுமை காப்பதன் மூலம் சில நல்ல பலன்களையும் பெறுவீர்கள்.

கலைத்துறையினருக்கு தொழில் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். சக கலைஞர்களிடம் நிதானத்தை கடைபிடிப்பது நன்மை தரும். கோபத்தை குறைத்து தன்மையாக பேசுவதால் காரிய வெற்றி உண்டாகும்.

அரசியல் துறையினருக்கு தேவையற்ற அலைச்சலை குறைத்துக் கொள்வது நல்லது. எல்லாவகையிலும் நன்மை உண்டாகும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்ய தூண்டும். பிரிந்து சென்றவர்களை மீண்டும் சந்திக்க நேரலாம்.

மூலம்: இந்த மாதம் குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை அனுசரித்து செல்வது மனதுக்கு இதமாக இருக்கும். கணவன், மனைவிக்கிடையே சிறிய வாக்குவாதம் ஏற்படலாம். பிள்ளைகள் உங்களை புரிந்து கொண்டு நடப்பது மனதுக்கு நிம்மதியை தரும்.

பூராடம்: இந்த மாதம் சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி உண்டாகும். அடுத்தவரை நம்பி பொறுப்புகளை ஒப்படைப்பதில் கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வியில் இருந்த போட்டிகள் விலகும். பாடங்களை படிப்பதில் இருந்த இடையூறுகள் நீங்கும்.

உத்திராடம் 1ம் பாதம்: இந்த மாதம் துன்பம் வருவது போல் இருக்குமே தவிர, ஆனால் வராது. மனதில் ஏதேனும் கவலை, பயம் அவ்வப்போது ஏற்படும். உங்களது பேச்சே உங்களுக்கு எதிர்ப்பை உண்டாக்கலாம். யோசித்து பேசுவது நல்லது. ஆன்மீக எண்ணம் அதிகரிக்கும்.

பரிகாரம்: நாக தெய்வங்களுக்கு மஞ்சள் கொடுத்து வழிபட பணப்பிரச்சனை தீரும்.

சந்திராஷ்டம தினங்கள்: அக்டோபர் 4, 5.

அதிர்ஷ்ட தினங்கள்: செப்டம்பர் 27, 28, 29.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன்.

மகரம்

(உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்). கிரக நிலைகள்: செப்டம்பர் மாதம் 17 ந் தேதி இதுவரை உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானத்தில் இருந்த சூரிய பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார்.

அக்டோபர் 3 ந்தேதி பாக்கிய ஸ்தானத்தில் இருந்த புதன் பகவான் தொழில் ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். மேலும் அக்டோபர் 4 ந்தேதி இரவு தொழில் ஸ்தானத்தில் இருந்த குருபகவான் லாப ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். அக்டோபர் 11ந்தேதி தொழில் ஸ்தானத்தில் இருக்கும் சுக்கிரபகவான் வக்கிரம் ஆகிறார்.

பலன்: வாக்குவாதங்களை தவிர்த்து காரியத்தில் கவனமாக இருக்கும் மகர ராசி அன்பர்களே! இந்த மாதம் குடும்பத்தில் நிம்மதி குறையும் படியான சூழ்நிலை வரலாம். கணவன், மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்து செல்வது நல்லதுபிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வது அவர்களின் வெற்றிக்கு உதவும்.

குடும்பஸ்தானாதிபதி சனி பகவான் விரையஸ்தானத்தில் இருப்பதால் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். குடும்பத்தில் திருமணம் தொடர்பான பேச்சுகள் வரும். இதனால் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். தேவையில்லாமல் வார்த்தைகளை விட வேண்டாம். அது குடும்பத்தில் கலகத்திற்கு வழி வகுக்கும்.

தொழில் ஸ்தானத்தில் குரு, புதன், சுக்ரன் என நல்ல கிரகங்களின் கூட்டமைப்பு இருப்பதால் தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். நீண்ட நாளாக தொழிலை விரிவுபடுத்த எண்ணியிருந்தது இந்த காலகட்டத்தில் நிறைவேறும்.

உத்யோகத்தில் புதிய வேலைகளைக் கற்றுக்கொள்ள வாய்ப்புகள் கிடைக்கும். இதன் மூலம் உங்களின் ஊதியம் உயரும். பெண்களுக்கு வரவேண்டிய பணம் வந்து சேரும். ஆன்மீக விஷயங்களில் அதிக ஈடுபாடு இருக்கும். கணவனுடன் நல்ல இணக்கமான உறவு இருக்கும். மாணவர்களைப் பொறுத்த வரை தொழிற்கல்வி பயிலும் மாணவர்களுக்கு அனுகூலமான காலமாக இருக்கும். உபகரணங்கள், உதவித்தொகை என அனைத்தும் கிடைக்கும்.

கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடிவரும். கிடைக்கும் வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்வது புத்திசாலித்தனம். உடனிருப்பவர்களை ஆலோசித்து காரியங்களை முன்னெடுப்பது உங்கள் வெற்றிக்குத் தடை வராமல் காக்கும்.

அரசியல் துறையினருக்கு தேவையற்ற அலைச்சலை குறைத்துக் கொள்வது நல்லது. எல்லாவகையிலும் நன்மை உண்டாகும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்ய தூண்டும். பிரிந்து சென்றவர்களை மீண்டும் சந்திக்க நேரலாம்.

உத்திராடம் 2, 3, 4 பாதம்: இந்த மாதம் தொழில் வியாபாரம் மூலம் வர வேண்டிய லாபம் தாமதப்படும். எதிர்பார்த்த நிதியுதவி ஓரளவு கிடைக்கும். ஆர்டர்களுக்காக இருந்த அலைச்சல் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விருப்பம் இல்லாத மாற்றம் வரலாம்.

திருவோணம்: இந்த மாதம் குடும்பத்தில் வீண் வாக்குவாதங்கள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பிள்ளைகள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்கள், நண்பர்களிடம் கவனமாக பழகுவது நல்லது.

அவிட்டம் 1,2 பாதம்: இந்த மாதம் எந்த ஒரு காரியத்தையும் செய்து முடிக்கும் வரை அந்த காரியம் முடியுமோ, முடியாதோ என்ற மனக் கவலை இருக்கும். வீண் அலைச்சல் குறையும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெறுவது பற்றிய மனக்கவலை இருக்கும். சகமாணவர்களுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

பரிகாரம்: முருகன் கோவிலுக்குச் சென்று வர வார்த்தைகளில் கவனம் அதிகரிக்கும்.

சந்திராஷ்டம தினங்கள்: அக்டோபர் 6, 7.

அதிர்ஷ்ட தினங்கள்: செப்டம்பர் 30; அக்டோபர் 1.

அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, சனி.

கும்பம்

(அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதம்). கிரக நிலைகள்: செப்டம்பர் மாதம் 17 ந் தேதி இதுவரை உங்கள் ராசிக்கு களத்திர ஸ்தானத்தில் இருந்த சூரிய பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். அக்டோபர் 3 ந்தேதி அஷ்டம ஸ்தானத்தில் இருந்த புதன் பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார்.

மேலும் அக்டோபர் 4 ந்தேதி இரவு பாக்கிய ஸ்தானத்தில் இருந்த குருபகவான் தொழில் ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். அக்டோபர் 11ந்தேதி பாக்கிய ஸ்தானத்தில் இருக்கும் சுக்கிரபகவான் வக்கிரம் ஆகிறார்.

பலன்: மனோ தைரியம் கூடினாலும் பழைய சம்பவங்களின் நினைவால் வாடும் கும்ப ராசி அன்பர்களே! இந்த மாதம் பணவரத்து இருக்கும். மனகவலை நீங்கும். எடுத்த காரியத்தை திருப்தியுடன் செய்து முடிப்பீர்கள். சாமர்த்தியமான பேச்சு இக்கட்டான நேரங்களில் கைகொடுக்கும்.

குடும்ப ஸ்தானத்தின் மீது சூரிய பகவானின் பார்வை விழுவதால், குடும்பத்தில் உங்களின் கருத்துக்கு முக்கியத்துவம் கிடைக்கும். நீங்கள் விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன் – மனைவி உறவு சிறப்பாக இருக்கும். குடும்பத்துடன் ஏதேனும் கோவிலுக்கு சென்று வருவீர்கள். பூர்வீக சொத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.

தொழில் ஸ்தானத்திற்கு மாதத்தின் பிற்பகுதியில் குரு பகவான் வருவதால் கூட்டுத் தொழில் செய்பவர்கள் லாபம் காண்பர். கூட்டாளிகளுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் தற்போது அகலும். ஒரு நல்ல புரிதல் உங்களுக்குள் உருவாகுமாதலால் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும்.

உத்யோகஸ்தர்களுக்கு உடலில் இருந்த பிரச்சனைகள் குறையும். இதனால் ஒரு சுறுசுறுப்பு ஏற்படு வேலைகளை கவனமுடன் செய்து மேலதிகாரிகளிடம் பாராட்டு பெறுவீர்கள். பெண்கள் குடும்பத்தினருடன் தேவையில்லாத வாக்குவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்ப்பது நலம். கணவனுடன் சிறிது விட்டுக்கொடுத்துச் செல்லுங்கள். மாணவர்கள் நீங்கள் காதில்கேட்கும் தேவையில்லாத விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டாம். இதனால் பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கலாம்.

கலைத்துறையினருக்கு பழகும் மனிதர்களின் வார்த்தைகளை நம்புவதா வேண்டாமா என்று சமயத்தில் சந்தேகம் ஏற்படலாம். வாழ்க்கையில் பிடிப்பும் ஆர்வமும் இல்லாமல் சலிப்பு உண்டாகலாம். அரசியல் துறையினருக்கு நிலவி வந்த பிரச்சனைகள் மறையும். யாருக்கும் வாக்கு கொடுக்கும் முன் ஆலோசனைகள் செய்து கொள்ளவும்.

அவிட்டம் 3, 4 பாதம்: இந்த மாதம் வீண்கவலை ஏற்பட்டு நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உங்களது சொத்து தொடர்பான விவகாரங்களில் தாமதம் ஏற்படும். பக்தியில் நாட்டம் அதிகமாகும். நெருங்கிய நண்பர்களிடம் மனஸ்தாபம் ஏற்படலாம்.

சதயம்: இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பார்ட்னர்கள் மற்றும் வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து செல்வது நன்மை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை பளு ஏற்பட்டாலும், எப்படியாவது செய்து முடித்து விடுவார்கள். சக ஊழியர்கள் ஒத்துழைப்பும் இருக்கும்.

பூரட்டாதி 1, 2, 3 பாதம்: இந்த மாதம் குடும்பத்தில் இருப்பவர்களுடன் ஏதாவது ஒருவகையில் வாக்குவாதம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே சிறுசிறு மனஸ்தாபம் உண்டாகும். சகோதரர்களிடம் கருத்து வேற்றுமை ஏற்படலாம். வெளியூர் பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும்.

பரிகாரம்: பிரம்மாவிற்கு மஞ்சள் வாங்கித் தர கடன் பிரச்சனைகள் குறையும்.

சந்திராஷ்டம தினங்கள்: அக்டோபர் 8, 9.

அதிர்ஷ்ட தினங்கள்: அக்டோபர் 2, 3.

அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, சனி.

மீனம்

(பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி). கிரக நிலைகள்: செப்டம்பர் மாதம் 17 ந் தேதி இதுவரை உங்கள் ராசிக்கு ரண, ருண, ரோக, சத்ரு ஸ்தானத்தில் இருந்த சூரிய பகவான் களத்திர ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். அக்டோபர் 3 ந்தேதி களத்திர ஸ்தானத்தில் இருந்த புதன் பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார்.

மேலும் அக்டோபர் 4 ந்தேதி இரவு அஷ்டம ஸ்தானத்தில் இருந்த குருபகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். அக்டோபர் 11ந்தேதி அஷ்டம ஸ்தானத்தில் இருக்கும் சுக்கிரபகவான் வக்கிரம் ஆகிறார்.

பலன்: புதிய நண்பர்களின் சேர்க்கையும் அவர்களால் உதவியும் கிடைக்கப் பெறும் மீன ராசி அன்பர்களே! இந்த மாதம் தொழில் வியாபாரம் தொடர்பான பணிகள் தடையின்றி நடக்கும். புதிய ஆர்டர் தொடர்பான காரியங்கள் சாதகமான பலன் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிசுமை குறைந்து மன நிம்மதி அடைவார்கள்.

குடும்பஸ்தானத்தை குரு, புதன் மற்றும் சுக்ரன் என சுபர்களின் பார்வை இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. பிள்ளைகளின் படிப்பிற்காக செலவு செய்வார்கள். அதற்கேற்றார் போல் பிள்ளைகளும் நன்றாக படிப்பார்கள். கணவன் – மனைவி உறவு நன்றாக இருக்கும். எனினும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துச் செல்வது நன்மை தரும்.

தொழில் ஸ்தானத்தில் சனி பகவானின் சஞ்சாரம் செய்வதும், லாப ஸ்தானத்தில் செவ்வாய் மற்றும் கேது பகவான் சஞ்சாரம் செய்வதும் தாமதமான நல்ல பலன்கள் தருமேயன்றி நஷ்டம் இல்லை. எனவே தாமததிற்காக யாரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபடவேண்டாம். பொறுமையைக் கடைபிடியுங்கள்.

உத்யோகஸ்தர்கள் வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடும். இரவு பகல் பாராமல் உழைக்க வேண்டி இருக்கும். அதற்கான நற்பலன்களையும் பெறுவீர்கள். கவலை வேண்டாம்.

மாணவர்கள் வெளியில் செல்லும் போது கவனம் தேவை. தேவையில்லாத இடங்களுக்குச் செல்வதைத் தவிர்த்தல் நலம். கலைத்துறையினருக்கு நீங்கள் அமைதியாக இருந்தாலும் வீண் சண்டைகள் மற்றும் வீணான குழப்பங்கள் உங்களைத் தேடி வர வாய்ப்பு இருக்கிறது. வீடு, நிலம் மற்றும் வாகனங்கள் வாங்கலாம்.

அரசியல்வாதிகள் யாரைப்பற்றியும் யாரிடமும் குறை கூற வேண்டாம். வாக்குவாதத்திற்கு இடம் தர வேண்டாம். மூத்தோர் சொல் கேட்டு நடப்பது வெற்றியை உண்டாக்கும். பிறமதத்தினர் உறுதுணையாக இருந்து நம்பிக்கை அளிப்பார்கள்.

பூரட்டாதி 4ம் பாதம்: இந்த மாதம் அடுத்தவர்களிடம் பேசும் போது யாரைப் பற்றியும் விமர்சிக்காமல் இருப்பது நல்லது. பணவரத்தில் தாமதம் இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் பின்தங்கிய நிலை மாற கூடுதல் கவனத்துடன் அதிக நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பது அவசியம்.

உத்திரட்டாதி: இந்த மாதம் பணவரத்து கூடும். ஆன்மீக செலவுகள் உண்டாகும். காரியதடை, தாமதம் விலகும். ஆனாலும் அந்த காரியத்தை செய்து முடிக்க கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். அன்னிய மொழி பேசுபவர்களால் உதவி கிடைக்கும். வசிக்கும் இடத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.

ரேவதி: இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் முன்னேற தேவையான வாய்ப்பு கிடைக்கும். தொழில் போட்டிகள் விலகும். தேவையான நிதியுதவி கிடைக்கக் கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக பணிகளை கவனித்தாலும் அலுவலக வேலைகளில் தாமதம் இருக்கும்.

பரிகாரம்: நாக தெய்வங்களுக்கு மஞ்சள், குங்குமம் இட திருமணத் தடை நீங்கும்.

சந்திராஷ்டம தினங்கள்: அக்டோபர் 8, 9.

அதிர்ஷ்ட தினங்கள்: அக்டோபர் 2, 3.

அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, சனி. – Source: tamil.webdunia


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply