இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
ஜூலை மாதத்தில் கிட்டத்தட்ட 43,000 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் தம்மிக்க விஜேசிங்க குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு | Foreign Tourists Visiting
இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கும், சுற்றுலா ஹோட்டல்களின் மின்சாரம் மற்றும் பிற தேவைகளுக்கும் எரிபொருளை வழங்கும் முறை ஏற்கனவே நடைமுறையில் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, இம்மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தம்மிக்க விஜேசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.



