பாடசாலை சிறுவர்களுக்கு விசேட வைத்திய நிபுணர் விடுத்த எச்சரிக்கை.

0

கோவிட் தொற்று அறிகுறிகள் காணப்படும் சிறுவர்களை பாடசாலைக்கு அனுப்புவதை தவிர்த்துக் கொள்ளுமாறு சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையில் கடந்த சில நாட்களாக கோவிட் தொற்று மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில் இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கோவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ள சிறுவர்களுக்கு காய்ச்சலுடன் இருமல், தடிமன் மற்றும் தொண்டை உள்ளிட்ட அறிகுறிகள் தென்படும் வீதம் அதிகரித்துள்ளது.

இவ்வாறு அறிகுறிகள் தென்படும் சிறுவர்களில் கோவிட் தொற்றாளர்கள் இனங்காணப்படும் வீதம் அதிகரித்துள்ளது.பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் கற்றல் செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல வேண்டிய தேவை காணப்படுகின்றது.

Leave a Reply